தமிழக-கேரள எல்லையை இணைக்கும் மாவட்டங்களில் முக்கியமாக பார்க்கப்படுவது தேனி மாவட்டம். கேரள மாநிலத்திற்கு செல்வதற்கு தேனி மாவட்டத்தில் இருந்து மூன்று மலைச்சாலை வழிகள் உள்ளது. போடி நாயக்கனூரில் இருந்து போடி மெட்டு வழியாகவும், கம்பத்தில் இருந்து  கம்பம் மெட்டு மலை வழியாகவும் குமுளி மலை வழி சாலை வழியாகவும் கேரளாவை அடைய முடியும்.


IND vs AUS World Cup 2023 Final: 2023 உலகக் கோப்பையை வெல்லப்போவது யார் ? இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? ஜோதிட கணிப்பு என்ன சொல்கிறது..



இந்த நிலையில் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கு அதிகப்படியான வாகனங்கள் தேனி மாவட்டம் வழியாவே செல்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் மகர ஜோதி விளக்கு நிகழ்வானது வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேனி மாவட்டம் கூடலூர் ,குமுளி வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் சென்று வந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


TN Assembly LIVE: ஆளுநருக்கு எதிரான தீர்மானம், ஒரு மனதாக நிறைவேற்றம் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..



சபரிமலை செல்லும் பக்தர்கள் எந்தவித இடையூறும் போக்குவரத்து நெரிசல் இன்றி சபரிமலைக்கு சென்று வர தேனி மாவட்ட காவல் துறையின் சார்பில் பக்தர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் கம்பம்மெட்டு சாலை  ஒரு வழி பாதையாக மாற்றப்படும். இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டும் நேற்று முதல் கம்பம்மெட்டு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.


பகீர்! மத்திய பிரதேச தேர்தலை அலறவிட்ட பணம், மதுபானம், போதைப் பொருள்... நடந்தது என்ன?



தேனியில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வாகனங்கள் தேனி, சின்னமனூர், கம்பம், கம்பம்மெட்டு, ஆமையார், புளிய மலை, கட்டப்பனை, குட்டிக்கணம், முண்டகாயம், எரிமேலி மற்றும் பம்பை வழியாக சபரிமலைக்கு செல்ல வேண்டும். ஐயப்பன் கோவிலில் இருந்து திரும்பும் வாகனங்கள் பம்பை, குட்டிக்கணம், பீர்மேடு,  வண்டிப்பெரியார், குமுளி, கூடலூர், கம்பம், சின்னமனூர் வழியாக திரும்பி வரவும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.


Ezhu Kadal Thaandi - Side B: நீங்கள் தவறவிடக்கூடாத காதல் கதை.. ‘ஏழு கடல் தாண்டி’ படத்தின் ட்விட்டர் விமர்சனம்!


போக்குவரத்து வழித்தட மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக பக்தர்களின் வாகனங்களுக்கு வழித்தடம் மற்றும் தகவல் தெரிவிப்பதற்காக முக்கியமான சாலை சந்திப்புகளில் தேனி மாவட்ட போக்குவரத்து காவலர்கள் பணியில் அமைக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட காவல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.