Chennai Metro Rail: 'போன் பே' மூலமாகவே மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும்படியான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்:
சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ரோ ரயில் சேவை. நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது.
அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் செப்டம்பர் மாதத்தில் 84.37 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.
இனி போன்பே மூலம் டிக்கெட் எடுக்கலாம்:
குறிப்பாக, பயண அட்டை, கியூ ஆர் கோடு, வாட்ஸ் அப் மூலட் டிககெட் எடுக்கும் வசதிகள் அறிமுகப்படுத்தி உள்ளது. சமீபத்தில் கூட, பேடிஎம் ஆப்பில் டிக்கெட் எடுக்கும வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில், போன் பே மூலமாக மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளுவதற்கான வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வசதியை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் அறிமுகப்படுத்தினார். போன் பே மூலம் டிக்கெட் எடுத்தால் 20 சதவீதம் வரைக்கும் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த வசதி மெட்ரோ பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் இனிமேல் டிக்கெட் கவுண்டரில் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை பெறுவதை தவிர்க்கிறது.
எப்படி பெறுவது?
முதலில் போன் பே அப்பிற்குள் நுழைய வேண்டும். அதில் முகப்பு பக்கத்தில் கீழே சென்னை மெட்ரோ என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து எத்தனை நபர்கள் பயணம் செய்வீர்கள் என்ற விவரத்தை குறிப்பிட்டு, புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தையும் பதிவு செய்து பணத்தை செலுத்தி டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். பின்னர், இந்த டிக்கெட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருக்கும் கேட்டில் க்யூ ஆர் கோர்ட்டை காண்பித்து பயணம் செய்யலாம். ஒரு முன்பதிவில் அதிகபட்சம் 6 டிக்கெட் எடுத்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.