தென்காசி வழியாக திருநெல்வேலி தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை இயக்கப்பட்டது. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த ரயில் ஆகஸ்டு 7 முதல் செப்டம்பர் மாதம் வரை இயக்கப்பட இருக்கிறது.
அதன்படி, திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (06004) ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 4 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06003) ஆகஸ்ட் 8 முதல் செப்டம்பர் 5 வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.35 மணிக்கு மதுரைக்கும், காலை 10.35 மணிக்கு திருநெல்வேலியும் வந்து சேரும்.
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
மேலும் படிக்க: Acer Televisions: ஸ்மார்ட் டிவிகளை களமிறக்கும் Acer நிறுவனம்! வாங்கலாமா? விலை எப்படி?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்