கோலிவுட்டில் குணச்சித்திர நடிகர்களில் முக்கிய நடிகராகவும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவராவும் வலம் வருபவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கர்.


சின்னத்திரையில் ஸ்ரீப்ரியாவுடன் ’சின்ன பாப்பா, பெரிய பாப்பா’ தொடரில் நடித்து பெரும் பிரபலமடைந்த எம்.எஸ்.பாஸ்கர், வெள்ளித்திரையில் மொழி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், 8 தோட்டாக்கள், டாணாக்காரன் என தன் முத்திரை குணச்சித்திரக் கதாபாத்திரங்களால் ரசிகர்களை ஈர்த்து, தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார்.


’கட்சிக்கு போகாதேன்னு கலைஞர் அப்பா சொன்னார்’




இந்நிலையில், எம்.எஸ்.பாஸ்கர் முன்னதாக தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிக் பாஸ் அழைப்பு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இறை பக்தி குறித்து பல சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.


அரசியல் பற்றி பேசுகையில், “அரசியலில் எனக்கு நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடிய அறிவு உள்ளது. ஓட்டுப்போடத் தெரியும். எல்லாக் கட்சிகளிலும் எனக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள். கலைஞர் அப்பா என்னை ”கட்சி அது இதுனு போய் சேராதே” என்று சொன்னார். ”எல்லா இடத்துலயும் நீ நடிக்க வேண்டி இருக்கும். நீ கலைஞன், அனைவருக்கும் பொதுவானவன்” என கலைஞர் கருணாநிதி அப்பா என்னிடம் கூறினார்.


விஜயகாந்த் அண்ணனும் இதை தான் கூறினார். கமல்ஹாசன் அண்ணனும் என்னை கட்சியில் சேரும்படி அழைக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.


100 நாள் ஒரு வீட்டில் எப்படி இருப்பது...


தொடர்ந்து பேசிய அவர், பிக் பாஸுக்கு என்னைக் கூப்பிட்டார்கள். நான் என் வீட்டிலேயே 100 நாள்கள் இருக்க மாட்டேன். என்னால் எப்படி இன்னொரு வீட்டில் 100 நாள்கள் இருக்க முடியும். என்னைக் கூப்பிட்டார்கள் ஆனால் எனக்கு பொறுமையில்லை.




சிந்திப்பதற்காக ஆண்டவன் அறிவைக் கொடுக்கிறான். ஆனால் நாம் அதை மழுங்கடிப்பவர்களிடம் நாம் போய் அமர்கிறோம். இது இறை மறுப்பு பேசுபவர்களுக்கு வாய்ப்பாகிறது. குரு என்பவர் நிச்சயம் வேண்டும். யாரிடம் இருந்து வேண்டுமானாலும் நாம் கற்றுக் கொள்ளலாம். ஒருத்தரிடம் போய் உட்கார்ந்து ஏமாறத் தேவையில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.


மு.கருணாநிதியை ஈர்த்த பட்டாபி


சினிமாவில் தொடக்க காலத்தில் டப்பிங் ஆர்டிஸ்டாக வலம் வந்த எம்.எஸ்.பாஸ்கர், ’சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரின் பட்டாபி கதாபாத்திரத்துக்காக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பாராட்டுகளை பெற்றதும்,  மு. கருணாநிதியை அப்பா என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண