லேப்டாப்களுக்கும், கம்யூட்டர்களுக்கும் பெயர்போன Acer நிறுவனம் தற்போது ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.  


கம்யூட்டர், லேப்டாப்களில் Acer  என்பது மிகவும் பிரபலமான நிறுவனம். பல நிறுவனங்கள்  சந்தையில் போட்டியில் இருந்தாலும் தனக்கென தனி மார்கெட்டை வைத்திருக்கும் Acer, தற்போது ஸ்மார்ட்டிவி விற்பனையில் களமிறங்கியுள்ளது. கடந்த வருடமே இதற்கான அறிவிப்பையும் வெளியிட்ட நிலையில் தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது Acer நிறுவன ஸ்மார்ட் டிவிகள்.ஐ சீரிஸ் டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது Acer நிறுவனம். ரூ.19990 என்பதையே தொடக்க விலையாக நிர்ணயித்துள்ள இந்நிறுவனம் 32 இன்ச் , 43 இன்ச் , 50இன்ச் , 55 இன்ச் ஆகிய அளவிலான டிவிக்களை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.  அதன்படி டிவிக்களின் விலையானது. ரூ.19,990 (32HD), ரூ. 34,990 (43UHD), ரூ. 40,990 (50UHD) மற்றும் ரூ.47,990 (55UHD) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது




32இன்சைத் தவிர மற்ற மாடல் டிவிகளில் 4k டிஸ்பிளே, HDR சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களான மைக்ரோ டிம்மிங், 30வாட்ஸ் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ, அனைத்து ஓடிடி சப்போர்ட் ஆகியவையும் இதில் அடங்கும்.


பெரிய திரையான 55இன்ச் டிவியின் விலை ரூ.47999 ஆகவுள்ளது. பொதுவாக தற்போது ஸ்மார்ட் டிவியில் சந்தையில் ரியல்மி, எம் ஐ, வியூ, ஒன்ப்ளஸ் மாதிரியான நிறுவனங்கள் மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட்டிவிகளை விற்பனை செய்கின்றன. ரூ.30ஆயிரத்துக்கே 50இன்ச் டிவியை வியூ கொடுக்கிறது. இந்நிலையில் Acer நிறுவன டிவிக்கள் அதிக விலையாக இருப்பதாகவே பயனர்கள் கருதுகின்றனர். குறைந்த விலைக்கே பல சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டிவி சந்தையில் கிடைக்கும்போது Acerன் புதிய தயாரிப்புகளை விலை அதிகமாக கொடுத்து வாங்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


அதேவேளையில் விலை அதிகம் என்றாலும் சூப்பரான டிஸ்பிளே, சவுண்ட், சில சிறப்பம்சங்கள் என Acer சற்று பாசிட்டிவான விஷயங்களையும் கொண்டுள்ளது. கம்யூட்டரை பொறுத்தவரை நீங்கள் ஒரு Acer ரசிகர் என்றால் நிச்சயம் டிவியிலும் அந்த ஆர்வம் உங்களுக்கு வரலாம். மற்றபடி, ஸ்மார்ட் டிவி உலகத்தில் இந்த விலையில் போட்டியாளர்களை Acer சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




மேலும் படிக்க:பட்ஜெட் விலையில் ஐபோன் தரத்தில் புதிய மொபைல்! புதிய பிராண்ட்! விவரங்கள் உள்ளே!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண