தமிழக, கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதத்திற்கு முன்பு வரை சாரல் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அதன்படி அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 31-ந் தேதி 121.60 அடியாக இருந்தது.




இந்நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. அணையின் நேற்றைய நீர்மட்டம் 119.20 அடியாக இன்று குறைந்து உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 83 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் அணையில் இருந்து வினாடிக்கு 400 கன அடியாகவும் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


TNPSC Chairman: டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்; ஆளுநர் கேள்விகளுக்கு விரைவில் பதில்: தமிழ்நாடு அரசு தகவல்


இதே போல் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் வரதமாநதி, பாலாறு,பொருந்தலாறு அணைகள் அமைந்துள்ளன. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும். இந்த அணைகள் பழனி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி பகுதியின் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் ஆதாரமாக உள்ளன. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் பழனி அணைகள் முழுகொள்ளவை எட்டியது.




அதைத்தொடர்ந்து குடிநீர், பாசனத்துக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கடும் வெயில் நிலவுவதாலும் பழனி அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. பாலாறு, பொருந்தலாறு அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் குடிநீர், பாசனத்துக்காக வினாடிக்கு 24 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.


Chess World Cup: செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா… முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்திப் பதிவு!


இதனால் 65 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 34.6 அடியாக சரிந்துள்ளது.அதேபோல் 66.47 அடி உயரமுள்ள வரதமாநதி அணையில் 62 அடி வரை தண்ணீர் உள்ளது. குடிநீருக்காக மட்டும் அணையில் இருந்து வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறும்போது மழை இல்லாததால் எல்லா அணைகளுக்கும் நீர்வரத்து இல்லை. எனினும் பழனி, ஆயக்குடி பகுதியின் குடிநீர் தேவைக்கு போதிய அளவில் தண்ணீர் இருப்பு உள்ளது என்றனர்.