தமிழ் சினிமாவில் பிரபலத்தின் உச்சியில் இருக்கும் நடிகரான விஜய் இன்றுடன் சினிமாவில் அடியெடுத்துவைத்து 30  ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் முதன் முதலாக சினிமாவில் ஒரு  நாயகனாக அறிமுகமான திரைப்படம் 'நாளைய தீர்ப்பு'. அப்படம் வெளியான நாள் இன்று. இந்த தினத்தை '30 இயர்ஸ் ஆஃப் விஜயிசம்'  என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலகளவில் உள்ள விஜய் ரசிகர்கள் நடிகர் விஜயை கொண்டாடி வருகின்றனர்.


30 Years of Vijayism: 30 வருட சினிமா சாம்ராஜ்யம்.. கட்டியெழுப்பிய தளபதியின் கதை!




இதனை கொண்டாடும் விதமாக வாரிசு படத்தில் இருந்து தீ தளபதி பாடல்  வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜயின் 30 வருட சினிமா வாழ்கையை கொண்டாடும் விதமா, தேனியில் விஜய் மக்கள் இயக்கத்தினர், சினிமா துறையில் சாதித்த விஜய் வரும் 30 ஆண்டுகாலம் அரசியலில் சாதிப்பார் என்றும் நாளைய முதல்வர் விஜய் என்றும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். மேலும், அதற்காக யாகம் நடத்தி அன்னதானமும் வழங்கியுள்ளனர்.


30 Years of Vijayism : விஜயிசம்.. 30 வருடங்கள்... நடிகர் விஜயின் மோசமான 5 தருணங்கள்.. அவமானங்கள் படிக்கட்டுகளாக மாறிய கதை..

விஜய்யை அரசியலில் தொடர்புபடுத்தி பேனர்கள் ஒட்டப்பட்டு வருவது அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில், விஜய் அரசியல் களம் காண்பார் என்பதை தெரியப்படுத்தும் விதமாக விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது தேனியில் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.




IND vs BAN 1st ODI LIVE: 8 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 25/1... இந்தியா அபார பந்துவீச்சு


அதேபோல் தேனி அருகே உள்ள பெரியகுளம் செங்குளத்துப்பட்டி என்ற கிராமத்திலும் விஜய் ரசிகர் மன்றத்தினர் சார்பாக சத்யாகிரக சேவா ஆசிரம கோவிலில் விஜய் ரசிகர்கள் சிறப்பு யாகம் வளர்த்து, நடிகர் விஜய் கலைத்துறையில் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என வழிபாடு செய்தனர். கோவிலிலும் யாக பூஜையும் நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு அப்பகுதி கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கி  நடிகர் விஜய்’ன் 30 ஆம் ஆண்டு கலைத்துறை பயணத்தை கொண்டாடினர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண