IND vs BAN 1st ODI LIVE: முதல் ஒரு நாள் ஆட்டத்தில் வங்கதேசம் த்ரில் வெற்றி

IND vs BAN 1st ODI Score LIVE Updates:

முகேஷ் Last Updated: 04 Dec 2022 06:33 PM
40 ஓவர்கள் முடிவில்...

40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது வங்கதேசம்.

8 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேசம்

39 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்தது வங்கதேசம்.

6 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்

36 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது வங்கதேசம்.

இன்னும் 77 ரன்கள் தேவை

29 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது வங்கதேசம்.

2ஆவது விக்கெட்டை கைப்பற்றிய சுந்தர்

வங்கதேச கேப்டனின் விக்கெட்டை வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர், அடுத்ததாக முக்கிய விக்கெட்டான ஷாகிப் அல் ஹசன் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால், வங்கதேசம் தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

கேப்டனின் விக்கெட்டை வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர்

வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸின் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். லிட்டன் தாஸ் 41 ரன்கள் எடுத்திருந்தார்.

3ஆவது விக்கெட்டை இழந்தது வங்கதேசம்

19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்களை எடுத்துள்ளது வங்கதேசம்.

13 ஓவர்கள் முடிவில் வங்கதேசம்...

13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு வங்கதேசம் 40 ரன்களை எடுத்தது.

2ஆவது விக்கெட்டை இழந்த வங்கதேசம்

11 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்தது.

6 ஓவர்களுக்கு வங்கதேசம் 17 ரன்கள்

6 ஓவர்களில் வங்கதேச அணி 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்த வங்கதேசம்

187 ரன்கள் சேஸிங்கை தொடங்கிய வங்கதேச அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சான்டோ சஹர் பந்துவீச்சில் டக் அவுட்டானார்.

186 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்

41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய கிரிக்கெட் அணி 186 ரன்களில் சுருண்டது.

40 ஓவர்கள் முடிவில்...

40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை இந்தியா அடித்துள்ளது.

படையெடுக்கும் முன்னே தடைப்போட்ட வங்கதேசம்... 19 ரன்களில் வெளியேறிய வாஷி..!

43 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த வாஷிங்டன் சுந்தர், ஷகிப் அல் ஹாசன் வீசிய 34வது ஓவரில் எபடோட் ஹொசைனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

30 ஓவரில் இந்தியா அணியின் எண்ணிக்கை என்ன..? 4 விக்கெட் போச்சு

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 30 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியாவுக்கு வீழ்ந்தது 4வது விக்கெட்.. விட்டுக்கொடுக்காத வங்கதேசம்..!

39 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த ஷ்ரேயஸ், ஐயர் எபடோட் ஹொசைன் வீசிய 20 வது ஓவரில் முஷ்பிகுர் ரஹீம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

IND vs BAN 1st ODI LIVE: 16 ஓவர்களில் இந்தியா நிலைமை இதுதான்..! ஏமாற்றிய சீனியர் வீரர்கள்..!

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 16.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. 

அடுத்தடுத்து வெளியேறிய ரோகித், கோலி... தடுமாறுகிறதா இந்தியா..?

31 பந்துகளில் 27 ரன்கள் அடித்து நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ஷகீப் வீசிய 11 வது ஓவரில் க்ளீன் போல்டானார். அவரை தொடர்ந்து விராட் கோலியும் 9 ரன்களில் அவுட்டானார். 

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 9 ஓவர் முடிவில் இந்திய அணி 40/1

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது. 

முதல் விக்கெட்டை இழந்த இந்தியா.. ஷிகர் தவான் மீண்டும் ஏமாற்றம்..!

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 

வங்கதேச அணி விவரம்...!

வங்கதேச அணி விவரம்: 


லிட்டன் தாஸ் (கேப்டன்), அனாமுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், எபாடோட் ஹொசைன்

இந்தியா அணி விவரம்...!

இந்தியா அணி விவரம்:


ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முகமது சிராஜ், குல்தீப் சென்

IND vs BAN 1st ODI LIVE: பேட்டிங் செய்யும் இந்தியா.. டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங் தேர்வு!

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அணி பேட்டிங் ஆட இருக்கிறது. 

Background

IND vs BAN 1st ODI Score LIVE Updates:


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் தோல்விக்கு பிறகு, இந்திய அணி அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதற்காக டி20 உலகக் கோப்பை பின் நியூசிலாந்து சென்ற இந்திய அணி டி2ஒ தொடரை வென்ற கையோடு, ஒருநாளை தொடரை இழந்தது. 


அந்த தொடரில் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவானும் தலைமை தாங்கினர். இந்த தொடருக்கு பின்னர், இந்திய அணி வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதற்கான முதல் போட்டியானது வங்கதேசத்தில் உள்ள டாக்கா மைதனத்தில் பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. 


இந்த தொடருக்காக இந்திய அணியில் கேப்டனாக மீண்டும் ரோகித் சர்மா களமிறங்குகிறார். அவரை தொடர்ந்து துணை கேப்டன் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் அணிக்கு திரும்புவதால் இந்திய அணி பேட்டிங் வரிசையில் ஸ்டாராங் ஆகிறது. 


சொந்த மண்ணில் வங்கதேசம்:


மற்ற தொடர்கள், மற்ற நாடுகள் சுற்றுபயணம் மேற்கொள்ளும்போது வங்கதேச அணி தடுமாறினாலும், தனது சொந்த மண்ணில் எதிரணிகளை புலியாக புரட்டி எடுத்து வருகிறது. கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு டி20 தொடரை வென்றது. அதேபோல், கடந்த 2015ம் ஆண்டு சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றது. இதையடுத்து வங்கதேச வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவிற்கு எதிராக கிரிக்கெட் தொடரை வென்று சாதனை படைத்தது. கடந்த 2007 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி, வங்கதேசத்திற்கு தோல்வியடைந்தது இன்றளவும் யாராலும் மறக்க முடியாதது. 


போட்டி எப்போது தொடங்கும்..?


இந்தியா - வங்கதேச இடையிலான முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு டாக்கா நகரில் உள்ள ஷேர் -ஈ- பங்ளா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை இந்திய அணி வங்கதேசத்தை 13 ஒருநாள் போட்டிகளில் சந்தித்து, 9 ல் வெற்றிபெற்றுள்ளது. 


இந்த மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிராக அதிக ரன் எடுத்த இந்திய வீரர்:



  • விராட் கோலி - அதிக ரன்கள்: 786

  • விராட் கோலி - அதிக சதங்கள்: 4

  • விராட் கோலி - அதிகபட்ச ஸ்கோர்: 183 


இந்த மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்:



  •  அஷ்வின் - 17 விக்கெட்கள்

  • சிறந்த பந்துவீச்சு: இர்பான் பதான்(4/32)


கணிக்கப்பட்ட இந்திய அணி: 


1. ரோகித் ஷர்மா (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் ஐயர், 5. கேஎல் ராகுல், 6. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 7. வாஷிங்டன் சுந்தர், 8. அக்சர் படேல், 9. ஷர்துல் தாக்கூர், 10. தீபக் சாஹர், 11. முகமது சிராஜ்


கணிக்கப்பட்ட வங்கதேச அணி:


1. லிட்டன் தாஸ் (கேப்டன்), 2. அனாமுல் ஹக், 3. ஷாகிப் அல் ஹசன், 4. முஷ்பிகுர் ரஹீம் (வாரம்), 5. மஹ்முதுல்லா, 6. அபிஃப் ஹொசைன், 7. யாசிர் அலி, 8. மெஹிதி ஹசன் மிராஸ், 9. ஹசன் மஹ்மூத், 10. முஸ்தபிஸுர் ரஹ்மான், 11. எஹோபாஸ் ஹின்து


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.