தேனி மாவட்டம் வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கெளமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. வருகிற 16-ந் தேதி வரை திருவிழா நடைபெறும். இவ்விழாவில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரங்கண் பானை எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.


Mother's day special: ஹீரோயின் டூ அம்மா...! தமிழ் சினிமா கண்ட பல வகையான அம்மாக்கள்..





இந்த நிலையில் இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக கோவிலில் திரளான பக்தா்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் தேரோட்டம் முடிந்த பிறகு அம்மனை தரிசனம் செய்து விட்டு இரவு நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினம் மற்றும் சர்க்கஸ் ஆகியவற்றை கண்டு களித்து கொண்டிருந்தனர். விழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் அங்கு இருந்தனர்.


Karnataka: கர்நாடகாவில் புதிய முதலமைச்சர் இவரா ?.. இன்று கூடுகிறது காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்..!




இந்நிலையில் ராட்டினங்கள் அமைக்கப்பட்ட வளாகத்தில் திரண்டு நின்ற பொதுமக்கள் கூட்டத்தில் சிலருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் அங்கு இருந்த நாற்காலிகள், கம்புகளை எடுத்து தாக்கி கொண்டனர். இதைக்கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.


Karnataka Election Result: வீழ்ந்த பாஜக... எழுச்சி கண்ட காங்கிரஸ்.. கர்நாடகா தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை..!




இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கிவிட்டனர். பின்னர் காயம் அடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே இந்த கோஷ்டி மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசார் முன்பு கோஷ்டி மோதல் நடந்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண