தமிழ் சினிமாவில் சென்டிமென்ட் என்பது ஒரு கவசமாக காலம் காலமாக இருந்து வருகிறது. சிவாஜி கணேசன் நடித்த 'மனோகரா' திரைப்படம் முதல் இன்றைய 'வாரணம் ஆயிரம்' சிம்ரன்  வரையில் தமிழ் சினிமாவில் அம்மா சென்டிமென்டுக்கு ஸ்பெஷலான ஒரு இடம் உண்டு. அன்னையர் தினமான இன்று தமிழ் சினிமா கண்ட மறக்க முடியாத சில அம்மாக்களை பற்றி காணலாம்.


ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பலரும் இன்று அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள். இந்த சென்டிமென்டை தொடங்கி வைத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தாய் பாசத்தை வைத்து படத்தின் டைட்டில் மட்டுமல்லாமல் பாடல்கள் மூலம் தாயின் பாசத்தை, பெருமைகளை மக்களுக்கு ஊட்டி வளர்த்ததில் பெரும் பங்கு வகித்தார். அவரின் காலம் தொட்டு இன்று வரை தாய் சென்டிமென்ட் என்றுமே ஒரு உணர்ச்சிபூர்வமான வகையில் காலத்துக்கு ஏற்றபடி திரைப்படங்களில் இடம்பெறுகிறது. 


பண்டரிபாய் : 


எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ராஜேஷ் கண்ணா என பல பழம்பெரும் நடிப்பு ஜாம்பவான்களுக்கு அம்மாவாக நடித்தவர். பராசக்தி படத்தில் சிவாஜியின் ஜோடியாக நடித்தவர் பின்னர் அவருக்கே அம்மாவாக நடித்தார். மன்னன் படத்தில் ரஜினிகாந்த் அம்மாவாக கை கால்கள் செயலிழந்த தாயாக நடித்தது அவரை ரஜினி குழந்தையை போல சுமந்து பணிவிடை செய்யும் சேவை இன்று வரை ஈடு இணை செய்ய முடியாத ஒரு கதாபாத்திரமாக அமைந்துள்ளது. 




சௌகார் ஜானகி :


எத்தனையோ திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த சௌகார் ஜானகி, நடிகர் ரஜினிகாந்த் அம்மாவாக 'தில்லு முல்லு' திரைப்படத்தில்   முற்றிலும் மாறுபட்ட ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மகனுக்காக தில்லு முல்லு செய்யும் ஒரு வேடிக்கையான அம்மாவாக ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி அம்மாவாக பலரின் பாராட்டுக்களை பெற்றார். 


ஸ்ரீவித்யா :


தென்னிந்திய சினிமாவில் 70களில் முன்னணி நடிகையாக இருந்து பின்னர் அழகான அம்மாவாக பல முன்னணி நடிகர்களுக்கும்  நடித்தவர். ரஜினியின் ஜோடியாக 'அபூர்வ ராகங்கள்' படத்தில் நடித்த அதே ஸ்ரீவித்யா பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு 'தளபதி' படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். 'காதலுக்கு மரியாதை' படத்தில் விஜய் அம்மாவாக நடித்த ஸ்ரீவித்யா போல ஒரு அம்மா நமக்கும் கிடைக்க மாட்டார்களா என இன்றைய இளைஞர்கள்  ஏங்கும் அளவுக்கு பாசத்தால் கட்டிப்போட்டவர். 


நதியா :


ஒரு முன்னணி ஹீரோயினாக மாடர்ன் நடிகையாக ஏராளமான ரசிகைகளால் கொண்டாடப்பட்டவர். சினிமாவில் இருந்து நீண்ட பிரேக் எடுத்துக் கொண்ட நதியா எம்.குமரன் சன் ஆஃப் மஹாலஷ்மி படத்தின் மூலம் ஒரு யங் அம்மாவாக ஸ்ட்ராங் கம் பேக் கொடுத்து இருந்தார். கணவன் இல்லாமல் ஒரு சிங்கிள் அம்மாவாக மகனை வளர்க்கும் தாய் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்திருந்தார். அப்படத்தின் வெற்றிக்கு காரணமே அம்மா - மகன் நிறைவான பாசமே. 


 



ராதிகா :


பன்முக திறமை கொண்ட ராதிகா முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் ஏராளமான திரைப்படங்களில் அன்பை கொட்டி தீர்க்கும் ஒரு பாசக்கார அம்மாவாக நடித்துள்ளார். ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த் அம்மா முதல் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் அம்மா வரை ராதிகா தனது யதார்த்தமான வெகுளித்தனமான அம்மாவாக பல வகையான நடிப்பை வெளிப்படுத்தியவர். சின்னத்திரையில் சித்தி என்றால் வெள்ளித்திரையில் அம்மாவாக கொடி நாட்டியவர். 



சரண்யா பொன்வண்ணன் :


இன்றைய தமிழ் சினிமாவில் அம்மா என்றாலே அது சரண்யா பொன்வண்ணன் தான் எனும் அளவிற்கு பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்தவர். ஒரு நாயகியாக ஜெயிக்க முடியாத சரண்யா தனது யதார்த்தமான நடிப்பால் சிறந்த அம்மாவாக எக்கச்சக்கமான விருதுகளை குவித்துள்ளார். தவமாய் தவமிருந்து, ராம், களவாணி, வி.ஐ.பி, தென்மேற்கு பருவக்கற்று, ஓகே ஓகே என அவரின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். 


ரம்யா கிருஷ்ணன் :


ராஜமாதா என்றதும் சட்டென்று கண் முன்னே பிளாஷ் அடிக்கும் முகம் ரம்யா கிருஷ்ணன். கம்பீரமான தோற்றம், அபாரமான நடிப்பு, கர்ஜிக்கும் குரலுக்கு சொந்தக்காரியான பாகுபலி ராஜமாதா வரலாற்றில் இடம்பெற்ற ஒரு சிறப்பான அம்மா. 'இதுவே என் கட்டளை... என் கட்டளையே சாசனம்' என்ற ராஜமாதா சிவகாமி தேவியின் இந்த வரிகள் காதுகளில் என்றுமே ஒலித்துக்கொண்டே இருக்கும்.  


சிம்ரன் :


90'ஸ் இளவட்டங்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரன்  தனது ஆளைக் சாய்க்கும் அழகால் உச்சத்தை தொட்டவர். அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தவர் இப்போது தனது சிறப்பான நடிப்பால் அழகான அம்மாவாகவும் நிரூபித்து வருகிறார். நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுடன் டூயட் பாடிய அதே சிம்ரன் 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தில் சூர்யாவின் அம்மாவாக அசத்தியிருந்தார். 


 



ஊர்வசி : 


நடிகை ஊர்வசியின் காமெடி சென்ஸ் பற்றி சொல்லவே தேவையில்லை. ஹீரோயினாக நடிக்கும் போது எப்படி துறுப்பாக இருந்தாரோ அதே துறுதுறுப்பு அம்மாவாக நடிக்கும் போது வெளிப்படுத்துவது தான் அவரின் ஸ்பெஷலிட்டி. அசுவின்டே அம்மா என்ற மலையாள திரைப்படத்தில் மீரா ஜாஸ்மின் அம்மாவாக நடித்த ஊர்வசி கதாபாத்திரம் மறக்க முடியாத ஒன்று. அம்மா - மகள் பாசம் தான் அப்படத்தின் ரியல் ஹீரோவாக இருந்தது. ஆர்.ஜே.பாலாஜியின் அம்மாவாக கிருஷ்ணவேணி கதாபாத்திரத்தில் 'வீட்ல விசேஷம்' படத்தில் வயதான காலத்தில் கர்ப்பமாகும் ஒரு அம்மாவாக ஊர்வசியின் நடிப்பு அப்லாஸ் பெற்றது. 


ஜோதிகா :


எக்ஸ்பிரஷன் குயின் என ஒரு ரவுண்டு கட்டிய நடிகை ஜோதிகா ஒரு பிரேக்குக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்த '36 வயதினிலே' படத்தில் வசந்தியாக கனமான கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருந்தார்.