மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா இந்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அழகர்மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கள்ளழகர் மீண்டும் தனது கோட்டைக்கு திரும்பினார். வைகையாற்றில் அழகர் எழுந்தருளிய ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள தடுப்பணையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.


இதனையடுத்து வைகை ஆற்றின் கல்பாலம் பகுதியில் 2 சடலங்கள் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் தீயணைப்புதுறையினர் உதவியுடன் இரு சடலங்களும் மீட்கப்பட்டன. அதில் மதுரை விளாச்சேரி ஜோசப்நகர் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பிரேம்குமார் என்ற இளைஞரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு சடலம் என 3 உடல்களும் உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.


5 பேர் உயிரிழப்பு:


இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மதிச்சியம் பகுதியில் சித்திரை திருவிழாவிற்கு வந்த மதுரை எம்.கே புரம் பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற 23 வயது இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதேபோன்று மதுரை வடக்கு மாசி வீதி பகுதியில் இருந்து தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு வருகை தந்த சுடலைமுத்து என்ற ஆட்டோ ஓட்டுனர் கூட்ட நெரிசலில் வந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு வந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை:


இந்நிலையில் சித்திரைத் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரத்தை சேர்ந்த ஆனந்த குமார் என்பவரை மதுரை மீனாட்சி திரையரங்கு பகுதியில் ஓட ஓட விரட்டி 5 பேர் கொண்ட கும்பல் சராசரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி விட்டு சென்றது குறிப்பிடதக்கது. சம்பவ இடத்திலேயே ஆனந்தகுமார் என்பவர் துடிதுடித்து உயிரிழந்தார். இதனை அறிந்த தெற்கு வாசல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.




சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யார்? எதற்காக இந்த கொலை நடந்துள்ளது? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இளைஞரை பட்டபகலில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN 12th Result 2023: பிளஸ்-2 தேர்வில் 514 மதிப்பெண், ஆனால் 4 பாடத்தில் பெயில் அதிர்ச்சியடைந்த மதுரை தம்பதி


 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண