தமிழக ஆளுநர் செல்வதற்காக தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. முழுமையாக போக்குவரத்து நிறுத்தியதால் பேருந்து பயணிகள் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக கொடைக்கானல் சென்று இன்று மதுரை சென்று அங்கிருந்து மதுரை விமான மூலமாக சென்னை செல்ல உள்ளார்.
நேற்று கொடைக்கானல் சென்ற தமிழக ஆளுநர் ரவி அன்னை தெராசா மகளிர் பல்கலை கழகத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு சென்ற ஆளுநருக்கு பழங்குடியின மக்கள் ஆடல் பாடலுடன் வரவேற்பு அளித்தனர். பின்னர் பல்கலை கழக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆளுநர் இன்று காலை கொடைக்கானலில் இருந்து 10 மணியளவில் புறப்பட்டு தேனி மாவட்ட எல்லையான காட்ரோடு வழியாக மதுரை சென்றார்.
தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பாதுகாப்பு கருதி காலை 10 மணி முதல் கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தேனி மாவட்ட எல்லை பகுதியான காட்ரோடு என்னும் இடத்தில் காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். மேலும் ஆளுநரின் வாகனம் வருவதற்கு முன்பாக அதே காட்ரோடு பகுதியில் திண்டுக்கல் செல்லும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும் ஆளுநர் செல்லும் பயணத்தால் வாகன போக்குவரத்து அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டதால் காட்ரோடு பகுதியில் இருந்து தேனி செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Lyca Productions: திரையுலகில் பெரும் பரபரப்பு... லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை
இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் வாகனம் மதுரையை நோக்கி சென்ற பின் கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் அனைத்தும் 2 மணி நேரத்துக்கு பின் அனுமதிக்கப்பட்டன.
கொடைக்கானல் சென்ற ஆளுநர் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புவதற்காக போக்குவரத்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டதால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் திண்டுக்கல், திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்து பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்