யாரையும் ப்ளாக்மெயில் செய்ய மாட்டேன், முதுகில் குத்த மாட்டேன். அனைவரும் ஒத்துமையுடன் இருப்போம் என டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார். 


கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 13ஆம் தேதி வெளியாகின. இதில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களை கைப்பற்றி ஆட்சியை இழந்துள்ளது. அதேபோல் ஜனதா தளம் (எஸ்) 19 இடங்களை தன் வசமாக்கியுள்ளது. இதையடுத்து, கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.  காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே, முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வருகிறது.


இதனிடையே நேற்று முன் தினம் சாங்கிரஸ் சட்டப்பேரவை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் குழு தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு வழங்கப்பட்டது. சட்டப்பேரவை குழு தலைவருக்கே முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


டெல்லிக்கு பறந்த சித்தராமையா, டி.கே சிவகுமார்: 


பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சித்தராமையா டெல்லிக்கு சென்றுள்ளனர். கர்நாடகாவில் 2வது முறையாக முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்பில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை சந்தித்தார். இந்நிலையில் டி.கே. சிவகுமாரும் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார். டெல்லிக்கு செல்லும் முன் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  “ 135 எம்.எல்.ஏக்களும் ஒன்றுமையாக உள்ளோம். அவர்கள் விரும்பாவிட்டாலும் பொறுப்புடன் நடந்துக்கொள்வேன். எம்.எல்.ஏக்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்பவில்லை. யாரையும் ப்ளாக்மெயில் செய்ய மாட்டேன், முதுகில் குத்த மாட்டேன்” என கூறினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை சந்தித்து முதலமைச்சர் பதவி குறித்து ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்படுகிறது. 


திட்டம் என்ன? 


இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவதால், முதலமைச்சர் பதவி இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு, தென்னிந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பு டி.கே. சிவக்குமாருக்கு வழங்கப்படும் என்றும் தேர்தலுக்கு  பின்னர், முதலமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது,. 


வரும் வியாழக்கிழமை, முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில், நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 


Karnataka CM: முதலமைச்சர் ஆனார் சித்தராமையா..? வாழ்த்து தெரிவித்த டி.கே.சிவகுமார்..! கர்நாடகாவில் நடந்தது என்ன?


WhatsApp Update: இனி மெசேஜ் எல்லாம் ரகசியம் தான்... வாட்ஸ் அப்பில் வந்த அசத்தலான அப்டேட்...!