மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன் 17 வயதான இவர் தற்போது பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வு எழுதியுள்ள நிலையில் அதே பள்ளியில் பயிலும் பாவானி (17) என்ற மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு மாணவனின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த வீரபத்திரன் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த காதலி பவானியும் தன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.



 

சம்பவம் அறிந்த பாலமேடு போலீசார் விரைந்து வந்து இறந்த மாணவன், மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடலை வாடிப்பட்டி, மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


 


என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.