திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த 22 பேர் கொடைக்கானலுக்கு  வேனில் சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டுகளித்த அவர்கள் பழனிக்கு செல்ல முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல்,பழனி மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தனர். மன்னார்குடியை சேர்ந்த இளம்பரிதி (25) என்பவர் வாகனத்தை ஓட்டினார்.


Karnataka CM: ”கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த விரும்பவில்லை;முதுகில் குத்த மாட்டேன்” : டெல்லி செல்லும் முன் டி.கே சிவக்குமார்




சவரிக்காடு அருகே 7-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் சாலையோரத்தில் உள்ள 100 அடி பள்ளத்துக்குள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் இளம்பரிதி, மன்னார்குடி வ.உ.சி.ரோடு பகுதியை சேர்ந்த கவுரி (18), தன்சிகா (4), திவ்யா (29), வசந்தா (70), முகேஸ்வரன் (15), காயத்ரி (21), பாரதி செல்வன் (15), சங்கவி (26), தஞ்சாவூரை அடுத்த மடிகை பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (45) உள்பட 22 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.


Lyca Productions: திரையுலகில் பெரும் பரபரப்பு... லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை




IPS Transfer: 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. உள்துறை முதன்மை செயலர் பி. அமுதா அதிரடி..


விபத்து நடந்த இடத்தில் விபத்துக்குள்ளானவர்கள் அலறிய சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் பழனி  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கி, காயமடைந்தவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் (45) பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண