தேனி மாவட்டத்தில் வரும் 07.05.2024 முதல் 14.05.2024 வரை நடைபெறவிருக்கும் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவிலின் சித்திரை பெருந்திருவிழாவினை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் அரசுபேருந்துகள் வீரபாண்டிக்கு இயக்கப்படும்.
சித்திரை திருவிழா கொடியேற்றம்
தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தேனி வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடி ஏற்றம் என்ற கம்பம் நடும் விழா சென்ற 17ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு உகந்த வேப்ப இலை மற்றும் மஞ்சள் கலந்த புனித நீரை கொடிகம்பத்தில் ஊற்றி கெளமாரி அம்மனை வழிபட்டனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரிசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 8 நாட்கள் வரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடி ஏற்றம் எனப்படும் கம்பம் நடும்விழா கடந்த 17ம் தேதி நடைபெற்றது.
World Laughter Day 2024: “கலகலவென சிரி.. கண்ணீர் நீர் வர சிரி” - உலக சிரிப்பு தினம் இன்று!
பிரிசித்தி பெற்ற கெள மாரிஅம்மன் கோவில் திருவிழா
இதனை தொடர்ந்து கொடி ஏற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடி கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டு வருவர். வரும் மே 07.05.2024 அன்று முதல் திருவிழா துவங்கி 14.05.2024 அன்று நிறைவு பெறும். இன்று கம்பம் நடும் இந்நிகழ்ச்சியில் முன்னதாக வண்ணி மரத்தில் மூன்று கிளைகள் உள்ள சிவன் அம்சமாக உள்ள கொடி மரத்திற்கு முல்லைப்பெரியாற்றில் வைத்து கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்து ஊர்வலமாக கோவிலுக்கு கம்பம் கொண்டுவரப்பட்டு பின்னர், மூலஸ்தனத்திற்கு முன்னதாக உள்ள கம்பம் நடும் மேடையில் கம்பம் நடப்பட்டது.
Crime: இரவு முழுக்க இளைஞருடன் பேச்சு - காதல் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை
Crime: தூத்துக்குடியில் பயங்கரம்.. நடுரோட்டில் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவன், தாய்மாமா - காரணம் என்ன?
போக்குவரத்து மாற்றம்
வீரபாண்டி வழியாக செல்லும் அனைத்துப் பேருந்துகளும் வீரபாண்டியில் நின்று பக்தர்கள் இறங்கி ஏறும் வகையில் செயல்பட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவழாக்காலமான 07.05.2024 முதல் 14.05.2024 முடிய தேனியிலிருந்து சின்னமனூர் மார்க்கத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் உப்புக்கோட்டை விலக்கு , மார்க்கையன்கோட்டை விலக்கு, குச்சனூர், வழியாக மாற்றுப்பாதையில் சின்னமனூர் செல்லும், மேலும், சின்னமனூரிலிருந்து தேனி மார்க்கத்தில் வரும் அனைத்து வாகனங்களும் உப்பார்பட்டி பிரிவிலிருந்து தாடிச்சேரி, தப்புக்குண்டு, கொடுவிலார்பட்டி வழியாக தேனி வந்தடையும். கோவில் வளாகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு ஏதுவாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.