திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளான பூ மார்க்கெட், அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் திருடு போனது அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக திருடு போன வாகனங்கள் அனைத்தும் ஒரே நிறுவனத்தின் தயாரிப்பான இரு சக்கர வாகனங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இரு சக்கர வாகனங்களை திரும் திருடர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் சிறப்பு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ்எட்வர்டு மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர். மேலும் திருட்டு சம்பவங்கள் நடந்த இடங்களில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் இரு சக்கர வாகனங்களை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
AIADMK EPS: “ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக வளர்ச்சியை தடுக்க முடியாது” - இபிஎஸ் ஆவேச பேச்சு
காட்சிகளைக் கொண்டு விசாரித்ததில் வாகனங்களை திருடியது திண்டுக்கல்லை அடுத்துள்ள ம.மு.கோவிலூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 38), ஹக்கீம்சேட் (36) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 8 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே கோனூர் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள காலியிடத்தில் 10 கடைகள் கட்டி கோவில் பெயரில் வரி செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தனியார் சிலர், கடைகளை காலி செய்யக்கோரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி கடைகளை அகற்ற வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வருங்காலத்தை வழிநடத்த உள்ள உதயநிதி ஸ்டாலின் - கிரிக்கெட் விழாவில் அமைச்சர் மூர்த்தி பேச்சு
அதன்படி திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ரமேஷ்பாபு நீதிமன்ற உத்தரவுப்படி பணியை முடிக்க அப்பகுதிக்கு வந்துள்ளார். இதனையறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து தாசில்தாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தாசில்தாரை கிராம மக்கள் விடுவித்தனர். தொடர்ந்து கோனூரில், பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்