திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் இயற்கை அழகினை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர் , தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இங்கு நிலவும் குளிர், மிதமான வெப்பம், மழை உள்ளிட்ட காலநிலையை பெரும்பாலனோரை ரசிக்க வைக்கிறது.
TN DSP Transfer: தமிழ்நாட்டில் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் - டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு
போதைப் பழக்கத்திற்குள்ளானவர்கள் கஞ்சா மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மட்டுமே விற்கப்படும் போதை காளான் (மேஜிக் மஷ்ரூம்) விற்பனையும், அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தற்பொழுது அதிகரித்துள்ளது. சுற்றுலா வரும் வெளிமாநில இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து இந்த போதை காளான் அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. இதற்கு இன்னொரு பெயர் மேஜிக் மஷ்ரூம் ( தாவிரவியல் பெயர் சைலோசைபி) என்றும் இதை உட்கொள்ளுபவர்களுக்கு நீண்ட நேர போதை ஏற்படுவதாக கூறி பெரும்பாலும் கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் இந்த போதை காளான் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மேல்மலை கிராமங்களான மன்னவனூர்,பூம்பாறை, பூண்டி, கூக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையும் தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கு வரும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் இதற்கு அடிமையாகி இதனை பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து கொடைக்கானல் காவல்துறை சார்பில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மன்னவனூர் கைகாட்டி அருகில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்த இரண்டு கேரளா வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் . இதில் முன்னுக்கு பின்னாக பதில் அளித்த அவர்களை தொடர்ந்து விசாரணை செய்ததில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து எல்.எஸ்.டி போதை ஸ்டாம்ப் மற்றும் கஞ்சா ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது . விற்பனையில் ஈடுபட்ட கோயல் ஜோஸ் , சீபீன் பினு ஆகிய இருவரை உடனே கைது செய்து போதை ஸ்டாம்ப் , கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்து விசாரணையை தீவிர படுத்தி உள்ளனர்.