Palani Murugan Temple: தொடர் விடுமுறை எதிரொலி.. பழனி கோயிலில் குவிந்த பக்தர்களால் கடுமையான கூட்ட நெரிசல்!

பழனியில் முருகன் கோவிலில் விடுமுறை நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் 3 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்,

Continues below advertisement

பழனியில் முருகன் கோவிலில் விடுமுறை நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் 3 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக படிப்பாதையை மாற்றம் செய்து கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Continues below advertisement

TN DSP Transfer: தமிழ்நாட்டில் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் - டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு


அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.

Tamil Thalaivas PKL: புரோ கபடி லீக் - தொடர் தோல்வி, மீண்டு வருமா தமிழ் தலைவாஸ் அணி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு


இந்நிலையில் இன்று மார்கழி தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை , அரையாண்டு தேர்வு விடுமுறை, ஐயப்ப பக்தர்கள் வருகை என்பதாலும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையத்தில் இரண்டும் மணி நேரம் வரையும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் ,மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் தரிசனம் செய்ய முன்று மணி நேரம் வரையும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

PM Modi Trichy Visit: பாஜக தொண்டர்கள் குஷி.. ஜனவரி 2ம் தேதி திருச்சி வருகிறார் பிரதமர் மோடி - திட்டம் என்ன?


மேலும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுபடுத்தும் விதமாக குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மலைக்கு நடந்து செல்லவும் ,படிப்பாதை வழியாக கீழே இறங்கி வர கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிருத்திகை தினம் என்பதால் கூட்ட நெரிசலை கட்டுபடுத்திட  ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Continues below advertisement