சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 25-24 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் சுனில் குமார் மற்றும் ரேசா மிர்பாகேரி ஆகியோர் இணைந்து 9 டிஃபென்ட் புள்ளிகளையும் மூன்று சூப்பர் டேக்கிள்களையும் ஒன்றாக இணைந்து செய்து தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக சம்பவம் செய்தனர். 


இதேபோல், நேற்று முன் தினம் நடந்த பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணான சென்னையில் நடந்த முதல் இரண்டு போட்டிகள் என்பது ரசிகர்கள் தமிழ் தலைவாஸ் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருந்தது. இருப்பினும், அடுத்தடுத்து தமிழ் தலஒவாஸ் அணி, பாட்னா மற்றும் ஜெய்ப்பூர் அணிக்களுக்கு எதிரான தோல்வியை சந்தித்து அதிர்ச்சி அளித்தது. நேற்று ஜெய்ப்பூர் அணிக்கு எதிரான போட்டியின் தொடக்கத்தில்  ரெய்டிலும் சரி, டிபெண்டிங்கிலும் சரி, தமிழ் தலைவாஸ் அணியின் கைகளே ஓங்கி இருந்தது. போட்டி தொடங்கிய முதல் 10 நிமிடங்களுக்குள், தமிழ் தலைவாஸ் அணி, பிங்க் பாந்தர்ஸ் அணியை ஆல் அவுட் செய்து 7 புள்ளிகள் முன்னிலை பெற்றனர். 


முதல் பாதியில் இரண்டு அணிகளிலும் இரண்டு ரைடர்களே ஆதிக்கம் செலுத்தினர். தமிழ் தலைவாஸ் முதல் பாதியில் எடுத்த 8 ரெய்டு புள்ளிகளில் 7 புள்ளிகளை எடுத்து ஹிமான்ஷு நர்வால் கெத்து காட்டினார். அதேபோல், மறுமுனையில் அர்ஜுன் தேஷ்வால் பிங்க் பாந்தர்ஸின் அனைத்து ரெய்டு புள்ளிகளையும் எடுத்திருந்தார். இருப்பினும் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 16-10 என முன்னிலை பெற்றது.


இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணிக்காக இரண்டாவது ஆல் அவுட் எடுக்க அஜிங்க்யா பவாரின் டூ ஆர் டை ரெய்டில் களமிறங்கினார். அப்போது, முற்றிலும் டிஃபென்ட் மற்றும் டேகிள்களை மட்டும் நம்பி பிங்க் பாந்தர்ஸ் உறுதியுடன் இருந்தது. ஒவ்வொரு முறையும் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக ​​சுனில் குமார் மற்றும் ரேசா மிர்பகேரி நின்று சிறந்த டிஃபென்ட் மற்றும் டேகிள்களை சென்று பிங்க் பாந்தர்ஸ் அணியின் மலைபோல் நின்றனர். 


இதன் தொடர்ச்சியாக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றி பாதையை தன்வசமாக்க தொடங்கியது. இறுதி 30 வினாடிகளுக்குள் ஒரு புள்ளி முன்னிலை பெற்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான வெற்றியை பெற்றது. 


சிறந்த வீரர்கள்


தமிழ் தலைவாஸ்:


சிறந்த ரைடர் - ஹிமான்ஷு நர்வால் (8 ரெய்டு புள்ளிகள்)


சிறந்த டிஃபென்டர் - எம் அபிஷேக் (4 டிஃபென்ட் புள்ளிகள்)


ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்: 


சிறந்த ரைடர் - அர்ஜுன் தேஷ்வால் (7 ரெய்டு புள்ளிகள்)


சிறந்த டிஃபென்டர் - ரெசா மிர்பகேரி (4 டிஃபென்ட் புள்ளிகள்)


ஒற்றை ஆளாக கெத்துகாட்டிய ஹிமான்ஷு நர்வால் : 






தமிழ் தலைவாஸ் அணிக்காக போட்டியின் தொடக்கம் முதலே ஹிமான்ஷு நர்வால் அசாத்திய ரெய்டுகளை செய்து புள்ளிகளை அள்ளினார். நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் ஹிமான்ஷு நர்வால் முதல் பாதியில் எடுத்த 8 ரெய்டுகளில் தமிழ் தலைவாஸ் அணிக்கு 7 புள்ளிகளை பெற்று கொடுத்தார். இதையடுத்து, நேற்றைய ஜெய்ப்பூர் அணிக்கு எதிராக ஹிமான்ஷு நர்வால் செய்த சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளது தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம்.