பழனிசாமி இருக்கும் வரையில் அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை - டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் என் பின்னே அணி திரள்வார்கள் என்று தான் அண்ணாமலை கூறினார்.

Continues below advertisement

தேனியில் அமமுக சார்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தேனி அருகே உள்ள பழனிச்செட்டிபட்டியில் துவங்கியது. இக்கூட்டத்தில் அமமுக  மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், இணை மற்றும் துணை செயலாளர்கள் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் என பலர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Continues below advertisement


அப்போது அவர் பேசுகையில், "இன்று நடைபெற்ற கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பணியாற்றுவதற்கான ஆலோசனைகள் செய்யப்பட்டன. குறிப்பாக கிளை அமைப்புகள், பூத் ஏஜெண்ட்கள், ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் எப்படி தேர்தல் வேலைகள் பார்ப்பதற்கான ஆலோசனைகளை நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தோம். வரும் சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டத்தில் போட்டியிட உள்ளீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தேனி எனக்கு பிடித்த ஊர் என்பதால் இங்கு குத்தகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறேன் மாதம் இரு முறை வந்து செல்கிறேன்.

Railway Budget: பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வேக்கு ரூ. 6,362 கோடி - அமைச்சர் அஷ்வினி

அதனால் இங்கு ஆலோசனை கூட்டம் நடத்தினோம். ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, போடியில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல் தவறானது. போடி தொகுதி ஓபிஎஸ் தொகுதி எங்கு போட்டியிடுவது என்ற முடிவை எடுக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் தோல்வி தேனி மக்கள் என்னை ஏமாற்றியதாக நான் கருதவில்லை. மத்திய பட்ஜட் ஏழைகள், விவசாயிகள், மாணவர்களுக்கான தொலை நோக்கு பட்ஜட்.

மத்திய பட்ஜெட்! நல்ல பட்ஜெட்! - இந்தியாவை 10 ஆண்டுக்கு முன்னோக்கி எடுத்துச் செல்லும் பட்ஜெட் - ஓபிஎஸ்

Budget 2025: மக்கள் கைகளில் பணம் புரள, நாட்டில் தேவை அதிகரிக்க ..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன செய்யலாம்?

ஆனால் தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டம் இல்லை என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இது இந்தியாவின் வளர்ச்சிக்கான பட்ஜட்.பாஜக அதிமுகவை அழிக்கப்பார்க்கிறது எனப்பதெல்லாம் பொய். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் என் பின்னே அணி திரள்வார்கள் என்று தான் அண்ணாமலை கூறினார். எடப்பாடி பழனிசாமி என்ற சுயநலவாதி, பதவி வெறியர், துரோக சிந்தனை கொண்டவர் தான் அதிமுக ஒன்றிணைய தடைகல்லாக இருக்கிறார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற ஆசையில் சசிகலா சுற்றுப்பயணம் செய்கிறார்கள். விரைவில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளார்கள்" என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola