2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வேக்கு ரூ. 6, 362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ரயில்வே துறை அமைச்சர் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


பட்ஜெட் 2024-25:


மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட்டானது நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இது பிரதமர் மோடி தலைமையில், 3வது ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டாகும். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 7வது முழு பட்ஜெட்டாகும்.


பட்ஜெட் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் , மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளதாவது,   மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாட்டிற்கு  இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்றும், இதன் காரணமாக வரும் ஜூலை 27ல் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளோம். மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். இதுவரை தமிழ்நாடு சந்தித்த 2 பேரிடர்களுக்கான போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழ்நாட்டிற்கு , எந்தவொரு சிறப்பு திட்டமும் இல்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 


தமிழ்நாடு - ரயில்வே துறை :






இந்நிலையில், தமிழ்நாடு ரயில்வேக்கு வழங்கப்பட்ட நிதி குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது,  2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வேக்கு ரூ. 6, 362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 6, 080 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் 687 பாலங்கள் கட்டப்பட்டதாகவும் ரயில்வே துறை அமைச்சர் அமைச்சர் தெரிவித்துள்ளார். 




Also Read: Budget 2024 Income Tax Slab: ரூ. 3 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை! கழிவுத்தொகை 75, 000 ஆக அதிகரிப்பு