கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்  குமுளி அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்ததில் காரில் இருந்தவர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார்.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே கொட்டாரக்கரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து புகை வெளியேறி நிலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் காரின் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது திடீரென காரில் தீயானது கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அப்போது காரில் ஒருவர் இருந்தது தெரியவந்தது. அவர் அப்பகுதியை சேர்ந்த ரோய் ஜெபாஸ்டின் என்பவர் என்று தெரியவந்தது.


CM Stalin: தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் : பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்




அருகே இருந்தவர்கள் காரில் இருந்த ரோய் ஜெபாஸ்டினை காப்பற்ற முயன்றனர். ஆனால் தீயானது காரில் மளமளவென பரவியதால் அவரை காப்பற்ற இயலவில்லை என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் தீணையப்பு துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த தீணையப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.


பட்ஜெட் பரபரப்புக்கு மத்தியில் ராகுல் காந்தியைச் சந்தித்த அமைச்சர் அன்பில்- என்ன காரணம்?


பின்னர் காரில் இருந்த ரோய் ஜெபாஸ்டின் உடல் கருகிய நிலையில் மீட்க்கப்பட்டது. இதனிடையே காரிலிருந்து புகை வெளியேறியபோது ரோய் ஜெபாஸ்டின் ஏன் காரிலிருந்து வெளியேற முயற்சிக்கவில்லை. ஏன் பொதுமக்களின் உதவியை கேட்கவில்லை என பல சந்தேகத்திற்கிடமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.  இதற்கிடையே ரோய் ஜெபாஸ்டின் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக குமுளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.