பண்டிகை தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவியும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ள், நகர் பகுதிகளில் சுமார் 3 கிமீ தூரம் வரை சாலையின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து  சுற்றுலா வாகனங்கள் சென்றன.




பிரபலமான சுற்றுலா தலம்:


மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.


தூதர்கள் மூலம் சிக்னல் அனுப்பிய ஈரான்.. பைடனிடம் கை விரித்த நட்பு நாடுகள்.. ஷாக்கான இஸ்ரேல்!




அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை:


பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு. குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். தற்போது ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகை விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்திருக்கின்றனர்.


தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!


இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக கொடைக்கானலில் தொடர் மழை பெய்து வரக்கூடிய நிலையில் இன்றும் காலையிலிருந்து சாரல் மலையில் துவங்கி தற்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழையால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளால் முக்கிய சுற்றுலா தலங்கள் ஆன மோயர் சதுக்கம்,  பைன் மரக்காடுகள் , குணா குகை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரே நேரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .




பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்


மேலும் தொடர்ந்து கன மழை பெய்ததால் சுற்றுலா இடங்களை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கொடைக்கானலில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் கொடைக்கானல் முகப்பு பகுதியில் அமைந்திருக்க கூடிய வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையால் குளுகுளு காலநிலை நிலவினாலும் சுற்றுலா இடங்களை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்தனர்.