Sivagangai: கோயிலில் கிரிக்கெட் விளையாண்டா... என்ன தப்பு - எல்.முருகன் காட்டம்

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு எந்த மாற்றமும் நிகழவில்லை. - எல்.முருகன் வருத்தம்

Continues below advertisement
ஆளுநர் உடன் தமிழக அரசு இணைந்து செயல்படுவதை அனைவரும் வரவேற்கின்றனர். அதுவே எனது விருப்பமும் என அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
 
இன்னும் ஓராண்டில் புல்லட் ரயில் இந்தியாவில் ஓடும்
 
ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரப்பெண்களில் வேலுநாச்சியாரும், குயிலியும் முக்கியமானவர்கள். வீரத்தாய் குயிலியின் 144 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை அருகே ராகினிபட்டியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் நினைவு மணிமண்டபத்தில் உள்ள குயிலியின் திருவுருவச் சிலைக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, zf47இந்தியாவில் மக்கள் போகாத பல பகுதிக்கு கூட ரயில் சென்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ரயில்வே துறை பல்வேறு சீரமைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தவர், இன்னும் ஓராண்டில் புல்லட் ரயில் இந்தியாவில் ஓடத் துவங்கும்.
 
 
ரயில் விபத்து குறித்த கேள்விக்கு
 
சென்னையில் நேற்று நடைபெற்ற ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அது குறித்து தெரியவரும் என்றார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளதாகவும், கடந்த இரண்டு நாட்களில் தமிழக அரசிற்கு தேவையான ரூ.7500 கோடி  நிதியை  நிதியமைச்சர் விடுவித்துள்ளார். மத்திய அரசு கேட்டுள்ள சில விவரங்களை தமிழக அரசு வழங்கியவுடன், கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்கும் என்றார்.
 
கோயிலில் கிரிக்கெட் விளையாண்டால் என்ன தவறு
 
மேலும், சிதம்பரம் கோயிலில் தீட்சீதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறு இல்லை என கூறியவர், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு எந்த மாற்றமும் நிகழவில்லை. கருணாநிதியின் குடும்பத்தினருக்கு மட்டுமே உபயோகமாக இருக்குமே தவிர,  தமிழக மக்களுக்கு உபயோகமாக இருக்கப் போவதில்லை என உறுதிப்பட தெரிவித்தார். தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளை கெளரவிக்கும் விதமாக வீரத்தாய் குயிலிக்கு தபால் தலையை வெளியீட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும், ஆளுநர் உடன் தமிழக அரசு இணைந்து செயல்படுவதை அனைவரும் வரவேற்கின்றனர். அதுவே எனது விருப்பமும் என அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola