தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு , குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.


"போஸ்டர் ஒட்ட மாட்டேன்; காசு தர மாட்டேன்.. பிடிச்சுதுனா ஓட்டு போடுங்க" - மத்திய அமைச்சர் கறார்




தற்போது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதி மற்றும் அருவிக்கு நீர் வரத்து வரும்  பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை 10 நாட்களாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.


Asian Games 2023 Medal Tally: 11 தங்கம் உள்பட 41 பதக்கங்கள் வென்று பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா




இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக அருவியில் நீர்வரத்து குறைந்து சீரான நிலையில் நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதித்தனர். இதனிடையே பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கும்பக்கரை அருவியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.


CM Stalin: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!


மேலும் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நீரில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உல்லாசமாக குளித்து மகிழ்கின்றனர். கும்பக்கரை அருவிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில் கொடைக்கானல் பகுதியில் இருந்து நீர் வருவதால் அதிக குளிர்ச்சியுடன் இருப்பதால் குளிப்பதற்கு நல்ல சூழல் நிலவுவதுடன் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் திகழ்வதால் தங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தனர்.