தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள சர்ச் தெரு பகுதி சேர்ந்தவர் பால்பாண்டி இவரது மகன் அருண்குமார் வயது 24. இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி கூடலூர் அருகே உள்ள கருநாக்கு முத்தன்பட்டியில் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சென்று உள்ளார். 

மாலை போடுவதில் தகராறு:

அப்போது அங்கு கருநாக்கு முத்தன்பட்டி யூனியன் பள்ளி தெருவை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மகன் கீர்த்தி வயது 25 அவரும் அங்கு வந்துள்ளார். அப்போது அந்த இறுதிச் சடங்கில் மாலை போடுவது தொடர்பாக அருண்குமாருக்கும் கீர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து தகராறு ஈடுபட்ட இருவரையும் அக்கம்பக்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் அங்கிருந்து அனுப்பினார். 

Asian Games 2023 Medal Tally: 11 தங்கம் உள்பட 41 பதக்கங்கள் வென்று பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா

வெட்டிக் கொலை:

இருப்பினும் இரண்டு பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கீர்த்தி செல்போன் மூலம் அருண்குமாரை அடிக்கடி தொடர்பு கொண்டு வாக்குவாதம் செய்ததுடன் மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் நேற்று முனிடம் இரவு கீர்த்தி அருண்குமாரை தொடர்பு கொண்டு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் குள்ளப்ப கவுண்டன்பட்டி பிரிவு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் அருகில் இருவரும் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்துள்ளனர். அருண்குமார் தன்னுடன் அவரது நண்பரான அரவிந்த் என்பவர் உடன் அங்கு சென்றிருந்திருக்கிறார். அப்போது அங்கு கீர்த்தி தனது தம்பி கிரேன் ,நண்பர் பாண்டியன் ஆகியோருடன் வந்திருந்திருக்கிறார்.

CM Stalin: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

உயிரிழப்பு:

அருகில் வந்ததும் அருண்குமாருடன் கிரேன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதனை அரவிந்த் தடுக்க முயன்றுள்ளார் சிறிது நேரத்தில் கீர்த்தியும் கிரேனும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அருண்குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் அருண்குமார் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கீர்த்த்தி மற்றும் பாண்டியன் ஆகியோர் அங்கிருந்து சென்று விட்டனர். உடனே அரவிந்த் இது குறித்து அருண்குமாரின் தந்தை பால்பாண்டிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருண்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கீர்த்தி உட்பட 3 பேரையும் தேடினர். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த கீர்த்தி மற்றும் பாண்டியனை போலீசார் கைது செய்தனர். கிரேன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். முன் விரோதம் தகராறில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

TN Rain Alert: வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு அலர்ட்... இன்றைய வானிலை அப்டேட் இதோ!