எந்த உணவு தயாரிப்பதாக இருந்தாலும் முதன்மையான இடத்தை பிடிப்பது தக்காளியும், வெங்காயமும் தான். சமீபகாலமாக தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை மிக வேகத்தில் உயர்ந்தது. கிலோ 100 ருபாய்க்கு மேல் வெங்காயத்தின் விலை உயர்ந்து தற்போது கிலோ 130 வரையில் விற்பனையாகி வருகிறது.
Actor Vijay: 'சூப்பர் ஸ்டார் விஜய்’ .. அன்றே சொன்ன அக்ஷய்குமார்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
உணவு தயாரிப்பதிலிருந்து தக்காளியை தற்காலிகமாக தள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டது. விலை எகிறி வரும் தக்காளி விலை எப்போது குறையும் என்ற ஏக்கம் எல்லோருடைய மனதிலும் இருந்து வருகிறது. குறைந்த விலையில் தக்காளி கிடைத்தால் அங்கு கூட்டம் அலைமோதுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தக்காளி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ ரூ.70-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் கிலோ ரூ.120-க்கு விற்ற தக்காளி திடீரென விலை வீழ்ச்சியை சந்தித்தது. ஒரே நாளில் ரூ.50 விலை குறைந்தது.
பல நாட்களாக தக்காளி வாங்க முடியாமல் தவித்த இல்லத்தரசிகளுக்கு, இந்த விலை வீழ்ச்சி அதிர்ஷ்டம் அடித்தது போல இருந்தது. இதனால் மார்க்கெட்டில் காலையில் இருந்தே கூட்டம் அலைமோதியது. தங்களுக்கு தேவையான தக்காளியை போட்டிப்போட்டு பொதுமக்கள் வாங்கி சென்றனர். சிலர் 5 கிலோ வரை தக்காளியை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. வழக்கமாக, வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு 1½ டன் தக்காளி வரத்து இருக்கும்.
ஆனால் நேற்று ஒரே நாளில் 2½ டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைவித்த தக்காளியை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். தக்காளி வரத்து அதிகமாக இருந்ததால் விலை குறைந்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் இந்த விலை வீழ்ச்சி நீடிக்குமா? அல்லது மீண்டும் விலை கடுமையாக ஏற்றம் காணுமா? என்பதை விவசாயிகள் மற்றும் மக்களிடையே எதிர்பார்ப்பில் உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்