ஆடித் திருவிழா: தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூக்கள் விலை அதிகரிப்பு

நாளை ஆடி 3-வது வெள்ளிக்கிழமை, நாளை மறுநாள் குச்சனூர் சனீஸ்வரர் கோவில் 3-வது வார ஆடித்திருவிழா என அடுத்தடுத்து வழிபாட்டுக்கு உகந்த நாட்களாக இருப்பதால் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்பு.

Continues below advertisement

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதக கருதப்படுகிறது. இதனால், கடந்த 2 வார காலமாக பூக்களின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் இன்று ஆடிப்பெருக்கு முன்னிட்டு நீர்நிலைகளில் பெண்கள் திரண்டு வழிபாடு நடத்துவார்கள். திருமணமான பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக்கொள்வதும், இளம்பெண்கள் நதிக்கரையில் வழிபாடு நடத்துவதும் வழக்கம்.

Continues below advertisement

ICC Test Rankings: முடிந்த ஆஷஸ் தொடரால் முடிவான ஐசிசி தரவரிசை... அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்.. ஸ்மித், ரூட் முன்னிலை!

இதற்கிடையே ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை  உயர்ந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையான மல்லிகைப்பூ நேற்று கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ சாதிப்பூ ரூ.500, முல்லைப்பூ ரூ.500, சம்பங்கி ரூ.300, செண்டுமல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.80, அரளி ரூ.250, ரோஜா ரூ.100, துளசி ரூ.30, மருகு ரூ.70 என விற்பனை செய்யப்பட்டது.

Seeman: சிறுபான்மையினர் என சொன்னால் செருப்பால் அடிப்பேன்: சீமான் ஆவேசம்..

நாளை ஆடி 3-வது வெள்ளிக்கிழமை, நாளை மறுநாள் குச்சனூர் சனீஸ்வரர் கோவில் 3-வது வார ஆடித்திருவிழா என அடுத்தடுத்து வழிபாட்டுக்கு உகந்த நாட்களாக இருப்பதால் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை மார்க்கெட்டில் விற்பனையாகும் பூக்களும் இன்று விலை உயர்ந்துள்ளது. பூக்களை கொள்முதல் செய்வதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானவர்கள் குவிந்தனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு மல்லிகை பூ கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது. நேற்று விலை உயர்ந்து கிலோ ரூ.850 முதல் ரூ.900 வரை விற்றது.

உடல் அடிக்கடி சூடாகும் ஆனால் வியர்க்காது... வலி உணர்வு இருக்காது - விசித்திர நோயால் 14 வயது சிறுவன் பாதிப்பு

மற்ற பூக்களின் விலையானது முல்லை- ரூ.450, ஜாதிப்பூ- ரூ.400, சம்பங்கி - ரூ.200, கனகாம்பரம்- ரூ.350, பட்டன்ரோஜா- ரூ.200, ரோஜா-ரூ.220, செண்டுமல்லி- ரூ.100, கோழிக்கொண்டை-ரூ.100, மரிக்கொழுந்து- ரூ.120, துளசி-ரூ.50. என பூக்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement