இணைய உலகில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் வரைமுறையில்லாமல் செயல்பட்டு ப்ராப்ளத்தில் சிக்கி கொள்வது என்பது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் ஆபாச அர்ச்சனைகளுக்கு புகழ்பெற்ற டிக்டாக் திவ்யாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டாலும் யூடியூப், பேஸ்புக், இஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் மூலம் தங்களின் வழக்கமான திறமைகளை வீடியோவாக பதிவிட்டு பிரபலமாகி பெயர் வாங்கும் நடைமுறை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் மருங்கூர் பகுதியை சேர்ந்த யூடியூபர் திவ்யா என்பவர் தொடக்கத்தில் டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர். டிக்டாக் செயலிக்கு பிறகு இவரின் பிரசங்கங்களை யூடியூப் சேனல் மூலமாக வெளியிட்டு பிரபலமானார். இந்த நிலையில் தேனி அருகே நாகலாபுரத்தில் சேர்ந்த சுகந்தி மற்றும் இவரது சகோதரி நாகஜோதி ஆகியோர் யூடியூப் வலைதளங்களில் பல்வேறு வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்த நிலையில், இவர்களை பற்றி திவ்யா, சுகன்யா குறித்து வலைதளங்களில் ஆபாச பதிவுகளை வெளியிட்டனர்
இதுகுறித்து தேனியை சேர்ந்த சுகந்தி கடந்த மாதம் 14 ஆம் தேதி தேனி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு யூடியூபர் திவ்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையிலான போலீசார் யூடியூபர் திவ்யாவை தேடி வந்தனர். இந்த நிலையில் இவர் நாகூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிந்ததையடுத்து யூடியூபர் திவ்யா கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் நிலக்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.
போலீசார் கைது செய்யும் தகவல் தெரிந்த யூடியூபர் திவ்யா தன்னை போலீஸ் கைது செய்ய உள்ளதாகவும் தன்னை பிடிப்பதற்கு தனது குடும்பத்தை பிடித்து வைத்துள்ளதாகவும் தனக்கு ஜாமீன் எடுப்பதற்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் அதற்கு தனது கூகுள் பே மூலம் பணம் அனுப்ப கோரியும் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்
Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!