தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக சுத்தம், சுகாதார இருவார விழா செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை நடத்தப்படுகிறது. முதல் நாளான நேற்று வியாழக்கிழமை மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில்  கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் சுத்தம் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க, ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும், அதை வழிமொழிந்து  உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 

இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*



 

வருடத்திற்கு 100 மணி நேரம், வாரத்திற்கு இரண்டு மணி நேரம் தன்னார்வமாக சுத்தம், சுகாதாரப் பணிக்கு தங்களை அர்ப்பணிப்பதாகவும், நாங்கள் அசுத்தம் செய்ய மாட்டோம் மற்ற யாரையும் அசுத்தம் செய்ய விடமாட்டோம், இன்னும் நூறு பேரை இந்த உறுதிமொழி எடுக்க ஊக்கப்படுத்துவோம் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து இந்த இரு வாரங்களில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம், மரக்கன்றுகள் நடுதல், அரசு சாரா தொண்டு நிறுவனங்களை  சுகாதார விழிப்புணர்வு பணிக்கு பயன்படுத்துவது, ரயில்வே பள்ளி குழந்தைகளுக்கு கட்டுரைப் போட்டி, பயோ கழிவறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ரயில் நிலையங்களில் சுத்தமாக வைத்திருக்க நடைமேடை பொது அறிவிப்பு கருவி வாயிலாக பயணிகளை வேண்டுவது,



 

மேலும் மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !

 

ரயில் நிலைய சுத்தம், சுகாதாரம் பற்றி பயணிகளிடம் பின்னூட்டம் பெறுதல், பெரிய ரயில் நிலையங்களில் முழுமையான சுத்தம், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல், குப்பைத் தொட்டிகளை பயன்படுத்த பிரச்சாரம், ரயில் பெட்டிகளை முழுமையாக தூய்மைப்ப்படுத்துவது, ரயில்வே சேவை அலுவலகங்களை தூய்மைப்படுத்துவது, உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை  பிரிவுகளை முழுமையாக ஆய்வு செய்வது, கழிவு நீர் வாய்க்கால்களை பராமரிப்பது, குடிநீரை சோதனை செய்வது, கழிவு நீர் சுழற்சி, மழை நீர் சேகரிப்பு நிலையங்களை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.  முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் நடைபெறும் சுத்த, சுகாதார பணிகளை மேற்பார்வையிட உரிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.