பாலக்காடு, திருச்செந்தூர் பயணிகள் ரயிலில் கை துப்பாக்கி வைத்து பயணிகளை அச்சுறுத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பயணிகளை அச்சுறுத்தியவர்களை சுற்றி வளைத்து பிடித்து, ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Asian Games 2023: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்! ஆசிய கோப்பையில் அசத்தல்!
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திண்டுக்கல்,மதுரை வழியாக இன்று காலை திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயிலில் திண்டுக்கல்லை அடுத்து வந்தபோது நீண்ட தலைமுடி மற்றும் பெரிய டிராவல் பேக்குகளுடன் நான்கு இளைஞர்கள் நவீன கை துப்பாக்கியுடன் துப்பாக்கியை மாறி மாறி உபயோகிப்பது போலவும் புல்லட் செருகுவது போலவும் கைசாகை செய்தும், துப்பாக்கியை சுடுவதுபோல காட்டியும் சக பயணிகளை அச்சுறுத்தியாக கூறப்படுகிறது, இதனால் அச்சமடைந்த இரயில் பயணிகள் ரயில் பெட்டியில் உள்ள ரயில்வே அவசர எண் மூலம் ரயில்வே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதயடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கொடைக்கானல் ரோடு இருப்புப்பாதை காவல் துறையினர் மற்றும் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் குமரேசன் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கொடைக்கானல்ரோடு ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்,
ரயில் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் உடனடியாக பிரச்சனைக்குரிய ரயில் பெட்டியை சுற்றி வளைத்த காவல்துறையினர், நான்கு இளைஞர்களையும் கையும் களவுமாக பிடித்து பத்திரமாக கீழே இறக்கி அவர்களின் உடைமைகளை சோதனை செய்து அவர்களிடமிருந்து கை துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், மேலும் தீவிர விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி நவீன ரக துப்பாக்கி மாடலை சேர்ந்த பொம்மை துப்பாக்கியெனவும் தெரியவந்தது, மேலும் காவல்துறை விசாரணையில் நான்கு இளைஞர்களும், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அமீன்ஷெரீப்(19),கண்ணூரைச் சேர்ந்த அப்துல் ராசிக்(24), பாலக்காட்டைச் சேர்ந்த ஜப்பல்ஷா(18),மற்றும் காசர்கோட்டைச் சேர்ந்த முகமது சின்னான்(20) என்பதும் அவர்கள் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற ரயிலில் மதுரை வரை சென்று மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவிற்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
AAP MP Arrest: ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைது.. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ED அதிரடி
மேலும் காவல்துறையினர் மற்றும் திண்டுக்கல் துறையினர் இணைந்து அவர்கள் கை துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்தவர்களா? அல்லது வேறு ஏதும் நோக்கத்திற்காக சென்றவர்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், ஓடும் ரயிலில் கைது பாக்கியை காட்டி பயணிகளை மிரட்டிய நான்கு பேர் சுற்றி வளைத்துக் காவல்துறை கைது செய்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.