கரூரில் ‘லியோ’ திரைப்பட டிரைலர் வெளியீட்டுக்காக விஜய் ரசிகர்கள் தியேட்டரை புக் செய்து டிக்கெட் விற்பனையில் இறங்கினர்.


தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள லியோ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், திரைப்படத்தின் டிரைலர் வருகின்ற 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 




இந்த நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் லியோ கொண்டாட்டத்திற்கு தயாராகி உள்ளனர். கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றிய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள லட்சுமி ராம் திரையரங்கை புக் செய்து அதற்காக பிரத்யேகமாக டிக்கெட்களை அச்சடித்துள்ளனர். 


சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் மதியழகன் டிரைலர் வெளியீட்டுக்கான டிக்கெட் விற்பனையை தொடங்கி வைத்தார். நடிகர் விஜய் ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் அந்த டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டனர்.