மதுரை ஜல்லிக்கட்டு
தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புகள், சொந்த ஊர் திரும்பும் மக்கள், கோயிலில் குவியும் மக்கள் ஆகியோருக்கு நிகராக மக்கள் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளே.
மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது ஆகும். இங்கு நடைபெறும் போட்டிகளை காண தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக படையெடுத்து செல்வார்கள். இந்நிலையில் இந்தாண்டு கூடுதல் விருந்தாக கீழக்கரை பிரமாண்ட மைதானத்திலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த சூழலில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக - 8 கிராம மக்கள் ஒன்று திரண்டு சுமார் 13 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் வருகின்ற 12.02.2024-ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள், 09.02.2024 காலை 10.00 முதல் 10.02.2024 காலை 10.00 வரை https://madurai.nic.in என்ற இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்குமாறு உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - திருச்சியில் பயங்கரம்... பெண் எரித்து கொலை - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸ் விசாரணை
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - CM M.K.Stalin Spech: ”ஸ்பெயின் பயணம் சாதனை பயணமாக அமைந்தது”.. சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!