குழந்தைகளின் மொழியில் பேசும்போது பல காத்திரமான அரசியலை அவர்களைக் கொண்டு மிக இயல்பான வார்த்தைகளில் சொல்லிவிட முடிகிறது. காக்கா முட்டைத் திரைப்படம் சிறந்தப் படத்திற்கான தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உசிலம்பட்டியில் காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் 2 தேசிய விருதுக்கான பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Womens Job Fair: மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம் - பதிவு செய்ய நாளையே கடைசி தேதி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த விளாம்பட்டியைச் சேர்ந்தவர் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன். இவரது வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள எழில் நகரில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக திரைப்பட வேலை தொடர்பாக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் சூழலில் அவரது வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு மணிகண்டனின் ஓட்டுநர்களான ஜெயக்குமார், நரேஷ்குமார் என்ற இருவரும் தினசரி வந்து உணவு வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நாய்க்கு உணவை வைத்துவிட்டு சென்ற பின் நேற்று வழக்கம்போல மாலை 4 மணியளவில் நாய்க்கு உணவு வைக்க வந்த நரேஷ்குமார். வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் வீட்டின் பீரோவில் இருந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசு வழங்கிய இரு தேசிய விருதுக்கான வெள்ளிப் பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள இயக்குநர் மணிகண்டன் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரே மேலும் பணம், நகை ஏதும் கொள்ளைபோனதா என தெரிய வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, டி.எஸ்.பி., நல்லு தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Pudupattinam Beach: சூப்பர் சுற்றுலாத்தலம் புதுப்பட்டினம் பீச்... அடிப்படை வசதிகள் செய்து தாங்க: மக்கள் கோரிக்கை
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai: மீண்டும் ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் தானம்.. மதுரை ஆயி பூரணம்மாள் அடுத்தடுத்து அசத்தல்!