பழனி திரு ஆவினன்குடி கோவிலில் இருதரப்பு பக்தர்களிடையே மோதல் ஏற்பட்ட தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கோவில் நுழைவாயிலில்  தகராறில் ஈடுபட்டு கற்கள் மற்றும் தேங்காய்களை வீசியதில் ஒரு தரப்பினர் காயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

IND vs AUS, LIVE Score: வார்னரை காலி செய்த ஷமி.. 2 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா..!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 29ம்தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்று கோவை மற்றும் இடைப்பாடி ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்திருந்தனர். பழனி திருஆவினன்குடி கோவிலுக்கு இடைப்பாடியை சேர்ந்த பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய சென்றபோது, அங்குள்ள கோவில் நுழைவாயிலில் நின்று கோவையை சேர்ந்த பக்தர்கள் சிலர் மேளம் அடித்து கொண்டிருந்தனர்.

Dada Movie Review: கவினுக்கு லிஃப்ட் மேலேயா? கீழேயா? - எப்படியிருக்கு டாடா படம்? முழு விமர்சனம் இதோ!

அப்போது இடைப்பாடியை சேர்ந்த காவடி பக்தர்களும் மேளம் அடித்துக்கொண்டே வந்தனர். இதையடுத்து இடைப்பாடி பக்தர்களை மேளம் அடிக்கக்கூடாது என்று கோவை பக்தர்கள் தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் மேளம் அடிப்பதை நிறுத்தாமல் இடைப்பாடி பக்தர்கள் தொடர்ந்து மேளம் அடித்ததால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தகராறு ஏற்பட்டு கோவையை  சேர்ந்த பக்தர்களை கோவிலில் இருந்து வெளியேற்றி கோவில் நுழைவாயிலில் உள்ள இரும்பு கேட்டை  இடைப்பாடி பக்தர்கள் பூட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோவை பக்தர்கள் அப்பகுதியில் இருந்த கடைகளில் இருந்த தேங்காய், கற்கள் மற்றும் கட்டைகள் ஆகியவற்றை கொண்டு தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

Maha Shivaratri 2023 : மகா சிவராத்திரி.... 'ஆதியோகி ரத யாத்திரை'.... வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..

Gold Price : ஹேப்பி நியூஸ் மக்களே... குறைந்தது தங்கம் விலை... இன்றைய நிலவரம் இதுதான்...

இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து திரு ஆவினன்குடி கோவிலுக்கு வந்த அடிவாரம் போலீசார் கோவில்‌ முன்பு தகராறில் ஈடுபட்ட பக்தர்களை விரட்டி அடித்தனர்.  தொடர்ந்து காயமடைந்த  இடைப்பாடி பக்தர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி கோவிலில் இருதரப்பு பக்தர்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண