நடமாடும் நகைக்கடை என பார்க்கப்பட்ட ஹரி நாடார் வரிசையில் மதுரை வரிச்சூர் செல்வமும் ஒருவர். நான் தாதா இல்லை நான் ஒரு தாத்தா தான் என பல சொல்லியுள்ளார். ஆனாலும் வரிச்சூர் செல்வம் மக்கள் மத்தியில் ரெளடி என பேரெடுத்து வலம் வருகிறார். இந்நிலையில் மதுரையின் பிரபல ரௌடி என பேசப்படும் வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,” நான் போட்டிருக்கும் தங்க நகைகள் என் மகளின் பெயரில் வாங்கியது எனது அப்பாவின் சொத்தில் ஜாலியாக வாழ்கிறேன். நான் ரௌடியெல்லாம் இல்லை ; என்னை ஜோக்கர் என்று சொல்லுங்கள், எனது குடும்பம் தி.மு.க., குடும்பம் ஆனால் நான் தி.மு.க.,வில் இல்லை, பா.ஜ.க.,வில் நான் சேரப் போவதில்லை , நகை பணம் இருப்பதால் நடிகைகள் என்னோடு ஒட்டிக்கொள்கிறார்கள். அதனால் ஜாலியாக இருப்பேன், காயத்ரி ரகுராமை நான் ஒருமுறை தான் பார்த்தேன். ஆனால் அதை திருச்சி சூர்யா தவறாக பதிவிட்டார் நான் பேசியவுடன் மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் அதனை நீக்கம் செய்துவிட்டார்.
படத்தில் வடிவேலு நானும் ரவுடிதான் என்று சொல்லுவார் ஆனால் நான் ரவுடி இல்லை என்று சொல்லுகிறேன். நான் எனது அப்பா சம்பாதித்த பணத்தை நான் ஜாலியாக சுற்றி அதனை அழிக்கிறேன், எனக்கு எல்லாம் ஜாலிதான், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என்ற கொள்கையோடு இருக்கிறேன். இப்போது பதவியில் உள்ள தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் யாராவது எதாவது தவறு செய்தால் கால் கையை உடைத்துவிடுவார் என்றார். நான் எங்கு சென்றாலும் என்னிடம் ஆர்வமாக போட்டோ எடுக்கிறார்கள், நான் ரௌடி இல்லை” என கைகூப்பி கேட்டுக்கொண்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தை உத்திர வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்