டெல்லி நொய்டா பகுதியில் தேசிய அளவிலான வளரி போட்டி கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இந்தோ பூமெரின் அசோசியேசன் நடத்திய இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டனர்.


Viral Video : குத்தா இல்ல தத்தா.. ரேஷன் கார்டில் பெயர்மாற்ற கூறி நாய்போல் குரைத்து காட்டிய நபர்.. வைரலாகும் வீடியோ.


இந்த போட்டியில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் இருந்து மூன்று அணிகள் கலந்து கொண்டனர். ஆறு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் போடியைச் சேர்ந்த மாஸ்டர் பிரபு,  சந்தோஷ், நவீன், சிவமணி, கிஷோர், குமார் ஆகிய ஐந்து இளைஞர்களும் ஆறு பரிசுகளை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்று ஊர் திரும்பிய இளைஞர்களை சிலம்பாட்ட மாணவர்கள் உற்சாகத்தோடு பட்டாசு வெடித்து மாலை அணிவித்து அவர்களை வரவேற்று அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் தமிழகத்தின் மறைக்கப்பட்ட ஆயுதமான வளரிய ஆயுதத்தை பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு பயிற்சியாக இவர்கள் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.


Actress Meena: 'ஆளே மொத்தமா மாறிட்டாங்க’ ... நடிகை மீனாவின் புது வீடியோவை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி


20க்கும் மேற்பட்ட வகையான வளரி ஆயுதத்தை இளம் வயது மாணவ, மாணவியர்களுக்கு கற்றுக் கொடுத்து வருவதன் மூலம் தமிழகத்தில் மறைக்கப்பட்ட வளரிய ஆயுதம் மீண்டும் புத்துயிர் பெறும் என இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த வளரி பயிற்சியானது இலவசமாக 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இவர்கள் கற்றுக் கொடுத்து வரும் நிலையில் இந்த வளரி ஆயுத பயிற்சி பெற ஆர்வமுள்ள நபர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுப்பதற்கு தாங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


Weight Loss : இப்போ இதுவும் ட்ரெண்ட்.. வெயிட் லாஸுக்கு ஸ்டெப் ஸ்டெப்பா சூரிய நமஸ்காரம் .. இதையும் படிங்க..


தமிழர்களின் இந்த வளரி ஆயுதத்தை கண்டு அந்நிய படைகள் வியத்து நின்று நடுங்கிய காலம் போய் வளரிஆயுதம் மறைக்கப்பட்டு தற்போது மீண்டும் இளம் சிறார்களுக்கு கற்றுக் கொடுத்து வரும் இந்த இளைஞர்களின்  முயற்சியினை போடி பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண