தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு  ஆண்டு தோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமர்சையாக நடைபெறும்.  குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மிகவும் முக்கியமானது.


 




 


 ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர்.




பொங்கலுக்கு இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில்  இப்போதிருந்தே, காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு, காளைகளுக்கு 2 மாதமாக நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்டம், மண்ணை கொம்பால் குத்தி கிளறும் பயிற்சி, அருகில் யாரையும் நெருங்க விடாமல் விரட்டும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இன்று மதுரை வைகை ஆற்றில் ஜல்லிக்கட்டு காளைக்கு மூச்சுப் பயிற்சி, நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டு தன்னுடைய காளையை தயார் செய்து காளையின் உரிமையாளர் உற்சாகப்படுத்தினர்.

 



மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காளைகளுக்கு உணவில் தொடங்கி பயிற்சி வரை அனைத்திலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். வாடிவாசலில் இருந்து வெளியேறும்போது காளைகள், காலை எடுக்கும் வேகம்தான் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் ஓடுவதற்கு உதவும்.