சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலமையை எடுத்துச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே அதிமுகவின் தலைமை குறித்து நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலைப்பாட்டில் அதிமுக செயல்பட வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது.
அதன்படி, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
இதனைஅடுத்து தேனி மாவட்டம் ஓபிஎஸ்-ன் சொந்த ஊரான பெரியகுளத்தில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காந்தி சிலை முன்பாக வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் இபிஎஸ் ஆதரவாக சென்ற பலர் தற்போது ஓபிஎஸ் பக்கம் திரும்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இபிஎஸ்க்கு ஆதரவாக ஓபிஎஸ்ன் சொந்த மாவட்டத்திலிருந்து பலர் சென்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த தீர்ப்பின் பின்பு தேனியை சேர்ந்த பலர் மீண்டும் ஓபிஎஸ் பக்கம் வரவுள்ளதாகவும், குறிப்பாக தேனி பெரியகுளம் பகுதியிலும் ஆண்டிபட்டியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் மீண்டும் ஓபிஎஸ் பக்கம் திரும்பி வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக மீண்டும் ஓபிஎஸ் பக்கம் இணைந்து செயல்படவுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
குறிப்பக தேனி அதிமுக மாவட்ட செயலாளரும் ஓபிஎஸ்ன் ஆதரவாளராக இருந்து வரும் சையதுகான் தலைமையில் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேரவாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் தேனியில் ஓபிஎஸ்ன் செல்வாக்கு மீண்டும் வலுவடைந்து வரலாம் எனவும் பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்