இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது மோசமான ஃபார்மில் உள்ளார். இதன்காரணமாக இந்திய அணியில் இவருடைய இடம் தொடர்பாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில் தன்னுடைய மனநிலை குறித்து விராட் கோலி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு ஒரு பேட்டியை அளித்துள்ளார். அதில், “ஒரு விளையாட்டு வீரர் உடைய சிறப்பான ஆட்டத்தை வெளியே கொண்டு வரும். அதேசமயம் அந்த விளையாட்டில் சாதிக்க வேண்டிய நெருக்கடி நம்முடைய மனநிலையை பாதிக்க வாய்ப்பு உண்டு. 






நாம் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் நம்மை உடைக்கும் வகையில் சில நேரங்களில் அந்த நெருக்கடியான சூழல் அமையும். ஒரு அறை நிறையே என்னை பிடித்தவர்கள் இருந்த போதும் நான் தனியாக இருப்பது போல் உணர்ந்து இருக்கேன். விளையாட்டை கேரியராக எடுக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு என்னுடைய அறிவுரை ஒன்று தான். உடற்தகுதி மற்றும் காயத்திலிருந்து மீள்வது ஆகியவை முக்கியமான ஒன்று. ஆனால் அதைவிட முக்கியமான ஒன்று நீங்கள் எப்போதும் உங்களுடைய ஆள் மனதுடன் தொடர்பில் இருப்பது. 


இந்த தொடர்பை நீங்கள் இழந்துவிட்டால் உங்களை சுற்றியுள்ள அனைத்தையும் சிதையும் வாய்ப்பு உள்ளது. ஆகவே உங்களுடைய நேரத்தை அதற்குஏற்ப சரியாக திட்டமிட்டு செயல்படுங்கள். ஒரு கடினமான தொடருக்கு பிறகு என்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதான் எனக்கு மிகவும் பிடிக்கும். அத்துடன் பயணம் செய்வது மற்றும் காஃபி குடிப்பது ஆகிய இரண்டும் என்னை மன அழுத்தத்திலிருந்து மீண்டு வர உதவும். உலகத்திலுள்ள பல்வேறு இடங்களில் உள்ள காஃபியை குடிக்க வேண்டும் காஃபி பிரியராக என்னுடைய விருப்பங்களில் ஒன்று” எனத் தெரிவித்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண