தென் மாவட்டங்களில் ஒவ்வொரு நிகழ்வும் கொண்டாடப்படும். குறிப்பாக கல்யாணம், காது குத்து, திருவிழாக்கள் என எல்லா நிகழ்விலும் சவுண்ட் சர்வீஸ் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்துவார்கள்.  துக்க வீடுகளில் கூட பாடலை இசைப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில், இது போன்ற சவுண்ட் சர்வீஸ் குழுக்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே வித்தியாகமாக நடைபெற்ற இசை போட்டியில் வெற்றி பெற்ற ஒலிபெருக்கி உரிமையாளருக்கு பரிசு வழங்கும் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது




மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு எம்.எஸ்.வி நற்பணி மன்றம் சார்பில் பழைய பாடல்களை இளம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வண்ணம் பழைய பாடல்கள் மற்றும் பழைய ரெக்கார்டுகள் மூலம் பழைய பாடல்களை ஒலிபரப்பு செய்து நடைபெற்ற இசைப் போட்டி கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றது.






இதில் பழமை மாறாது, பழைய பாடல்களை சத்தமாகவும், துள்ளியமாகவும் ஒலிபரப்பு செய்த ஒன்று முதல் 5 வெற்றியாளர்களுக்கு நேற்று தும்மக்குண்டு கிராமத்தில் பரிசுகள் வழங்கப்பட்டது.




இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அமைச்சர் வாகனத்தில் காலணி எறிந்த வழக்கு! 3 பேருக்கு ஆகஸ்ட் 31ம் தேதி நீதிமன்றக் காவல்!


இதில் முதல் பரிசாக தனக்கன்குளம் சினேகா ஒலிப்பெருக்கி உரிமையாளருக்கு 21 ஆயிரம் மற்றும் இரண்டாம் பரிசாக திருமங்கலம் செல்வா ஒலிப்பெருக்கி உரிமையாளருக்கு 15 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக கோவிலூர் நியூ பராசக்திக்கு 10 ஆயிரம், நான்காம் பரிசாக கோட்டூர் ராயல்க்கு 7 ஆயிரம், ஐந்தாம் பரிசாக உசிலை ஜெயா ஒலிப்பெருக்கிக்கு 4 ஆயிரமும் பரிசாக தும்மக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், செல்லம்பட்டி ஒன்றிய துணைச் சேர்மன் மணிகண்டன், சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி உள்ளிட்டோர் வழங்கி பாராட்டினர்.


இதுகுறித்து திருமங்கலம் பகுதி ரேடியோ செட் உரிமையாளர்கள் கூறுகையில்..,”  எங்களை போன்ற சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்களுக்கு இது போன்ற போட்டிகள் ஊக்கு விக்கும் வகையில் உள்ளது. தொடர்ந்து இது போன்ற பந்தயங்கள் நடத்தப்பட வேண்டும்”என தெரிவித்தார்.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண