உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் , அழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 16-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.




தேனி : உயரம் மாறி மாறி காட்சி தரும் சிவலிங்கம்.. பூலா நந்தீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்


அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் தண்ணீர் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது . அதனடிப்படையில் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும், வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, 3 மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் வைகையாற்றில் சிறீ பாய்ந்து சென்றது, வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீருக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்கள் தூவி வழிபட்டனர், இன்று திறக்கப்பட்ட தண்ணீர் 14 ஆம் தேதி மாலை மதுரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது,




பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், ஆற்றில் தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் இரவில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாகவும் தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் ஆரம்பத்தில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அளவு குறைக்கப்படும் என்று தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டதால் பக்தர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Madurai chithirai festivel: மதுரை வீதிகளில் உலாவந்த பிச்சாண்டவர் - நகருக்குள் வந்த அழகர் தங்க குதிரை..!


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -Track Alagar: சித்திரைத் திருவிழா: கள்ளழகர் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்ள “மதுரை காவலன்” செயலி!


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண