நெல்லையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் மாடியிலிருந்து தள்ளி விட்டதில் வாலிபர் உயிரிழந்தார். போலீசுக்கு பயந்து விபத்து நாடகம் அரங்கேற்றிய நண்பர்கள் நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
“எல்லாமே சூப்பர்தான்... ஆனால் இதை தவிர்த்திருக்கலாம்” - ஸ்டாலின் ஆட்சி குறித்து நடிகர் விஜய்
நெல்லை திருமால் நகரை சேர்ந்தவர் அரிஹரன்(22) இந்த நிலையில் அரிஹரன் மற்றும் அவரது நண்பர்களான கேடிசி நகரை சேர்ந்த ஜோசு செல்வராஜ் (29) சாந்தி நகரை சேர்ந்த ப்ரீத்தம்(23) பெருமாள்புரத்தை சேர்ந்த சிவக்குமார் (22) மற்றும் செல்வகுமார் (22) ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து நேற்றிரவு சாந்தி நகரில் உள்ள ப்ரீத்தம் வீட்டின் மொட்டை மாடியில் வைத்து மது அருந்தியுள்ளனர். பின்னர் கீழே இறங்கும்போது செல்வராஜூக்கும் அரிஹரனுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையின் உச்சத்தில் இருந்த செல்வராஜ் அரிஹரனின் சட்டையை பிடித்து இழுத்துள்ளார். அப்போது அரிஹரன் மாடி படியில் இருந்து சுமார் 12 உயரத்தில் கீழே விழுந்ததில் அரிஹரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே நான்கு பேரும் அரிஹரனை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் கேட்டபோது ஹரிகரன் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சிகிச்சை பலனளிக்காமல் ஹரிகரன் உயிரிழந்துள்ளார். பின்னர் மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆய்வு செய்ததில் அவர்கள் கூறியது போன்று விபத்து எதுவும் நடைபெறாததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து ஜோசு, செல்வராஜ் ,சிவகுமார், செல்வகுமார், ப்ரீத்தம் ஆகிய நான்கு பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் மது போதையில் அரிஹரனை கீழே தள்ளி விட்டதாகவும் கொலை செய்யும் நோக்கில் தள்ளி விடவில்லை என்றும் சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து பாளையங்கோட்டை போலீசார் இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து மேற்கண்ட நான்கு பேரையும் கைது செய்தனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.