தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை உள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 70 அடியாக உள்ளது. அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை அணை பூர்வீக பாசன பகுதி 1,2,3-ஐ சேர்ந்த விவசாயிகள் அந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீரை பெருக்கி வைக்கும் வகையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி  இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை 3 கட்டமாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.


ஆன்லைனில் போதை ஊசி ஆர்டர்.....பெண் உள்பட 6 பேர் கைது.. தேனியில் அதிர்ச்சி..!




முதற்கட்டமாக காலை 8 மணி முதல் 31-ந் தேதி வரை வைகை அணை பூர்வீக பாசன பகுதி 3-ல் உள்ள கண்மாய்களுக்கு மொத்தம் 840 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படும். இதையடுத்து வருகிற 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 4 நாட்களுக்கு வைகை அணை பூர்வீக பாசன பகுதி 2-ல் உள்ள 4 கண்மாய்களுக்கு 345 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.


TN Rains: மேக வெடிப்பு கண்டுபிடிப்பதில் சிரமம்.. தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!




ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கா..? ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி சொன்னது இதுதான்!


அதன் பின்னர் 8-ந் தேதியில் இருந்து 11-ந் தேதி வரை 3 நாட்களுக்கு வைகை அணை பூர்வீக பாசனப்பகுதி 1-ல் உள்ள கண்மாய்களுக்காக 192 மில்லியன் கனஅடி தண்ணீரும் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். மேலும் வைகை அணையில் இருந்து ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்படுவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Syllabus change: கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டத்தில் மாற்றம்.. அமலாவது எப்போது? விவரத்தைக் கூறிய அமைச்சர் பொன்முடி!


வைகை அணையில் இன்றைய நிலவரம்


1) வைகை அணை -
Level- 70.13 (71)feet
Capacity:5860 Mcft
Inflow:1191cusec
Outflow : 769 cusec ஆக உள்ளது..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண