தேனி மாவட்ட  ஆட்சியர் அலுவலக கூட்டரங்கின் பின்புறம் உள்ள காலியிடத்தில் நேற்று 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. மாலை வரை ஆடுகள் அங்கே நின்ற போதிலும் அவைகளை உரிமையாளர் யாரும் வந்து அழைத்து செல்லவில்லை. தகவல் அறிந்ததும் தேனி காவல் நிலையை போலீசார் அங்கு வந்து ஆடுகளை பார்வையிட்டனர். பின்னர் அந்த ஆடுகளின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.


ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கா..? ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி சொன்னது இதுதான்!




அப்போது, ராயப்பன்பட்டி அருகே உள்ள அணைப்பட்டியை சேர்ந்த விவசாயி தென்னரசு என்பவர், தன்னுடைய நிலப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் ஆடுகளை, ஆட்சியர் அலுவலகத்தில் விட்டு சென்றதாக தெரியவந்தது. நிலப்பிரச்சினை தொடர்பாக அவர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க ஆட்டுக்குட்டிகளுடன் வந்ததாகவும், மனுவை கொடுத்துவிட்டு ஆட்டுக்குட்டிகளை அங்கேயே விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரியவந்தது. இதையடுத்து தென்னரசுவை போலீசார் தொடர்பு கொண்டு ஆடுகளை அழைத்து செல்லுமாறு கூறினர்.


CJI UU Lalit Oath: 49வது தலைமை நீதிபதி.. 74 நாட்கள் பதவி..! பொறுப்பேற்றுக்கொண்டார் நீதிபதி யு.யு.லலித்!




ஆனால் அவர் அழைத்து செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் மேய்ந்து கொண்டு இருந்த ஆட்டுக்குட்டிகளுக்கு காவலர்களை பாதுகாப்பு பணிக்கு போடப்பட்டது. சார்பு ஆய்வாளர்  தலைமையில் 5 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரவு 9 மணி அளவில் தேனி நகராட்சி சந்தை வளாகத்தில் உள்ள நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை கட்டிடத்தில் ஆட்டுக்குட்டிகளை போலீசார் அடைத்தனர்.




இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தென்னரசிடம் கேட்டபோது தான் ராயப்பன்பட்டி பகுதியில் சண்முகா நதி அணை அருகே 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும் அதில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் போலியான ஆவணம் தயாரித்து தன் நிலத்தை அபகரிக்க முயலுவதாகவும், மேலும் இதுகுறித்து நில அளவையர் மற்றும் அரசு அதிகாரிகள் தரப்பில் புகார் அளித்தால் எந்தவித பயனும் இல்லை எனவும், நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறினார்.



 


சிகரெட்.. ஆணுறை! பங்களா வீட்டில் நடந்தது என்ன? மாணவியின் பரபரப்பு வாக்குமூலம்! தொடரும் விசாரணை!


மேலும், நில சம்பந்தமான பல்வேறு பிரச்னைகளுக்கு அரசு சார்ந்த அதிகாரிகளிடம் சென்றால் எந்த வித நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களை அலைக்கழித்து வருவதாகவும் புகார் கூறினார். தான் நிலத்தில் உள்ள பிரச்னைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்த மனு மீது நடவடிக்கை இல்லாததால் தான் வளர்த்து வந்த ஆடுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விட்டு விட்டு வந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து செய்திகள் பரவிய நிலையில் எனது நிலம் சம்பந்தமான பிரச்சனை மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண