தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு, குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது.




அதே போல தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள கம்பம் அருகே 15 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றுலாத்தளமாக அமைந்துள்ளது சுருளி அருவி. பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் இந்த அருவியில், ஆனந்த குளியிடும்போது போது வரும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்பார்கள். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதிக்குள் 40 அடி உயரம் கொண்ட இந்த அருவி வனப்பகுதியிகளிலிருந்து வரும் தண்ணீர் மூலம் அருவியாக உருவெடுத்துள்ளது. தென் மாவட்டங்களின் சின்ன குற்றாலம் என அழைக்கப்பட்டு வருகிறது சுருளி அருவி.


 



இந்த இரண்டு அருவிகளுக்கும் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாகி உள்ளது. தற்போது தொடர் விடுமுறை நாட்களான ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை , விஜயதசமி உள்ளிட்ட விசேச நாட்கள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களான இன்றும் அருவியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது . அருவிகளில் குளிக்க சுற்றுலாவாக வந்த வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு சென்றனர்.


 


Crime : திரைப்பட பாணியில் கடத்தப்பட்ட 200 கிலோ ஹெராயின்.. மடக்கிப் பிடித்த அதிகாரிகள்.. கொச்சியில் நடந்தது என்ன?


Biggboss In Trouble? : பிக்பாஸ் திட்டமிட்டபடி ஒளிபரப்பாகுமா? நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் பரபரப்பு..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண