சிவகங்கை குழந்தை வழக்கு: குழந்தைகள் நல குழு தலைவருக்கு அதிகாரம் இல்லை - நீதிமன்றம்

குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க குழந்தைகள் நல குழு தலைவருக்கு அதிகாரம் இல்லை - மதுரைக்கிளை

Continues below advertisement
சிவகங்கை மாவட்ட தம்பதியினரின் குழந்தையை வாரத்தில் 3 நாள் தந்தையிடமும் 3 நாள் தாயிடமும் இருக்கலாம் என குழந்தைகள் நல குழு தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில்,
குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க குழந்தைகள் நல குழு தலைவருக்கு அதிகாரம் இல்லை என்றும், குழந்தைகள் நல குழு தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
 
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் " நான் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் பவானி என்ற பெண்ணிற்கும் திருமணம் ஆகி 2020 ஆம் ஆண்டு எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் குழந்தையை ஆறு மாதத்தில் இருந்து நானும் எனது பெற்றோர்களுமே வளர்த்து வருகிறோம். இந்நிலையில் எனது மனைவி சிவகங்கை மாவட்டம் குழந்தைகள் நல குழு தலைவரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் எந்த விதமான விசாரணையும் செய்யாமல் குழந்தைகள் நல குழுத்தலைவர் குழந்தையை ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் என்னிடமும், மூன்று நாட்கள் எனது மனைவியும் பார்த்துக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சட்டத்திற்கு புறம்பானது. எனவே குழந்தைகள் நல குழு தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என  குறிப்பிட்டிருந்தார்
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, "குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க குழந்தைகள் நல குழு தலைவருக்கு அதிகாரம் இல்லை. எனவே குழந்தைகள் நலக்குழு தலைவர் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.  இது குறித்து குழந்தைகள் நல குழு தலைவர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 
 

மற்றொரு வழக்கு
 
Continues below advertisement