வெள்ளனூர் - புதுக்கோட்டை, மானாமதுரை - மேல கொன்னகுளம், திண்டுக்கல் - அம்பாத்துரை ராஜபாளையம் - சங்கரன் கோவில் ரயில் நிலையங்கள் இடையே அக்டோபர் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) அக்டோபர் 8 முதல் அக்டோபர் 15 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சிவகங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
திண்டுக்கல் - அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 15 வரை கோயம்புத்தூர் - நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும். இதே காலத்தில் சென்னை - குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும். இதனால் இந்த மூன்று நாட்களுக்கும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06672) இணைப்பு ரயிலாக செயல்படாது. ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 15 வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.
இதைப் படிக்க மிஸ் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -மதுரை மாநகராட்சி பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் கணவர்; அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதால் சர்ச்சை
மேலும் கொடைக்கானல்ரோடு ரயில் நிலையத்தில் நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 10 முதல் அக்டோபர் 15 வரை மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்” என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்