தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட  இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை, சிறைக் காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான மொத்தம் 3552 காலியிடங்களுக்காக எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2022 ஆகும். எனவே தகுதியுள்ள ஆண், பெண் விண்ணப்பதார்கள் www.tnsurb.tn.gov.in இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும் படிக்க: சென்னை: நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த கணவன்.. பனியனால் கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி!



இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் போது இலவச பாடக்குறிப்புகள், ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும்.


மேலும் படிக்க: super singer maanasi : விஜய் சேதுபதியை அடிக்காதீங்க... கதறி அழுத சூப்பர் சிங்கர் மானஸி ! இதுதான் காரணமாம் !


மேலும் இவ்வலுவலக நூலகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்வலுவலகத்தின் மூலம் இலவச  பயிற்சி வகுப்பில் பயின்று, 2021 ம் வருடத்தில் தேர்ச்சி பெற்ற 18 நபர்கள் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக தற்போது பணியாற்றி வருகின்றனர்.


மேலும் படிக்க: Sri Lanka Presidential Election LIVE: புதிய அதிபர் யார்? இலங்கையில் நாடாளுமன்றத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு!



                 


எனவே தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணைய இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் இவ்வலுவலக நேரடி பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த விண்ணப்ப நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களிடம் நேரில் சமர்ப்பித்து பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன்  தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: IT Raid: மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் ஐடி ரெய்டு - கலக்கத்தில் கட்டுமான நிறுவனங்கள்..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண